📅 Friday, 10 July 2026 IST | ஆனி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 10, 2026 10:33 PM

28 பந்தில் செஞ்சுரி.. 16 சிக்ஸ், 4 ஃபோர்.. ஆப்கானிஸ்தான் ஜாம்பவான் முகமது நபியின் மகன் ஹசன் மரண அடி

28 பந்தில் செஞ்சுரி.. 16 சிக்ஸ், 4 ஃபோர்.. ஆப்கானிஸ்தான் ஜாம்பவான் முகமது நபியின் மகன் ஹசன் மரண அடி

28 பந்தில் செஞ்சுரி.. 16 சிக்ஸ், 4 ஃபோர்.. ஆப்கானிஸ்தான் ஜாம்பவான் முகமது நபியின் மகன் ஹசன் மரண அடி

காபூல்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் முகமது நபியின் மகன் ஹசன் எய்சாகில், உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான நட்புமுறை டி20 போட்டியில் வெறும் 28 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். அவரது இந்த அதிவேக ஆட்டத்தின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் லெவன் அணி 20 ஓவர்களில் 323 ரன்கள் குவித்தது. மேலும், இந்தப் போட்டியில் 199 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தானின் காஸ்ட் நகரில் நடைபெற்ற இந்த 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற உஸ்பெகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. ஆப்கானிஸ்தான் லெவன் அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய 19 வயதான இளம் வீரர் ஹசன் எய்சாகில், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிட்ட அவர், வெறும் 17 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார்.

அடுத்த 50 ரன்களை இன்னும் அதிவேகமாக எடுத்த அவர், மேலும் 11 பந்துகளில், அதாவது ஒட்டுமொத்தமாக 28 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். 10வது ஓவர் முடிவில் அவர் ரிட்டையர்ட் அவுட் முறையில் ஓய்வு பெறும் போது, 34 பந்துகளில் 120 ரன்கள் குவித்திருந்தார். இதில் 16 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். அவரது ஸ்டிரைக் ரேட் 352.94 ஆக இருந்தது.

இன்னொரு தொடக்க வீரரான கேப்டன் இம்ரான் மிர் 32 பந்துகளில் 74 ரன்களும், இளம் வீரர் பைசல் ஷோய்னோசாடா 14 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர். ஒட்டுமொத்தமாக 27 சிக்சர்கள் மற்றும் 23 பவுண்டரிகளுடன் ஆப்கானிஸ்தான் லெவன் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்டியது.

அடுத்து 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய உஸ்பெகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் லெவன் அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உஸ்பெகிஸ்தான் தரப்பில் மெர்ஜுதீன் அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் வஃபாதார் மொமண்ட், நசீர் கான், இம்ரான் மிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.