📅 Saturday, 11 July 2026 IST | ஆனி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 10, 2026 11:34 PM

தொடர் தோல்வி: கம்பீரின் பயிற்சியாளர் பதவிக்கு ஆபத்து

தொடர் தோல்வி: கம்பீரின் பயிற்சியாளர் பதவிக்கு ஆபத்து

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த போட்டியில் 2-0 என இந்தியா தோல்வியடைந்தது. தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது மற்றும் 3-வது, 4வது போட்டிகளை இங்கிலாந்து அணி வென்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணியின் தொடர் தோல்வியால் தலைமை பயிற்சியாளர் கம்பீரின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கம்பீர் உள்ளிட்ட இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினரின் செயல்பாடுகளை பிசிசிஐ ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த ஆய்வில் கம்பீர் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.