📅 Saturday, 11 July 2026 IST | ஆனி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 10, 2026 11:31 PM

"தென்னிந்தியர்களும் வட இந்திய மொழி ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும்"

"தென்னிந்தியர்களும் வட இந்திய மொழி ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும்"

"தென்னிந்தியர்களும் வட இந்திய மொழி ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும்"- ஆளுநர் அர்லேகர் பேச்சு

"வட இந்தியாவில் உள்ளவர்கள் தமிழை கற்றுவருகிறார்கள்"- ஆளுநர் அர்லேகர்

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டிருந்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், "நமது கலாசாரம் பல்வேறுபட்ட கலாசாரம் என்று சொல்வதை விட தனித்துவமான கலாசாரம் என்று சொல்லலாம். வட இந்தியாவில் உள்ளவர்கள் தமிழை கற்றுவருகிறார்கள்.

தமிழ் கலாசசரம், பண்பாட்டை கற்க அவர்கள் தயாராகவும் உள்ளனர். நானும் தமிழ் கற்றுக்கொண்டு வருகிறேன். அதேபோல தென்னிந்தியர்களும் வட இந்திய மொழி ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும்" என்று பேசியிருக்கிறார். ஆளுநரின் இந்தப் பேச்சு, பெரும் பேசு பொருளாகி இருக்கிறது.

ஏற்கெனவே மதுரையில் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் அர்லேகர் வைகை ஆற்றை பற்றி பேசியதும், ஆலோசனை கூட்டம் நடத்தியதும் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.