ஜாதகத்தால் நிகழ்ந்த கொடூரம்.. வாலிபரை கொன்று உடலை ஆற்றில் வீசிய தந்தை
தேனி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் வேந்தர் பாலா (வயது 50). தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேனி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் ஆவார். இவருடைய முதல் மனைவி ராஜலட்சுமியின் மகன் ஸ்ரீகாந்த் (20). கடந்த 2023-ம் ஆண்டு தந்தையிடம் சொத்து கேட்டு ஸ்ரீகாந்த் அடிக்கடி தகராறு செய்ததால் இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது.
சி.பி.சி.ஐ.டி.
அதிர்ச்சி வாக்குமூலம்
அவர் கொடுத்த வாக்குமூலத்தின்பேரில் வேந்தர்பாலாவை நேற்று முன்தினம் இரவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரும் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்தார்.
மகனால் ஆபத்து
இதுதொடர்பாக போலீசார் வெளியிட்ட தகவல்படி, “வேந்தர்பாலா 3 திருமணம் செய்துள்ளார். முதல் மனைவியின் மகனான ஸ்ரீகாந்த், தன்னையும், தனது தாய் மற்றும் அக்காக்களையும் நிர்கதியாக விட்டுச் சென்றது தொடர்பாக வேந்தர்பாலாவிடம் கேட்டதோடு, அவர் பெயரில் உள்ள சொத்தை தங்களுக்கு கொடுக்குமாறு கேட்டு தகராறு செய்துள்ளார்.
கழுத்தை நெரித்து கொலை
அதன்பேரில் சம்பவத்தன்று இரவு கருப்பையா, ஸ்ரீகாந்தை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தேனி அருகே வயல்பட்டி முல்லைப்பெரியாற்று படுகைக்கு அழைத்து சென்றார். அங்கு வேந்தர்பாலாவும், ஸ்ரீகாந்துடன் ஏற்கனவே முன்விரோதம் கொண்டிருந்த அலெக்ஸ்பாண்டியனும் வந்தனர். இந்த முன்விரோதத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள கருப்பையா அழைப்பின்பேரில் அலெக்ஸ்பாண்டியன் அங்கு வந்திருந்தார்.
பின்னர் அவர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது ஸ்ரீகாந்தை துண்டால் கழுத்தை நெரித்து அவர்கள் கொலை செய்தனர். உடலை அப்படியே விட்டால் மாட்டி கொள்வோம் என்பதால், இறைச்சி வெட்டும் கட்டை கத்திகளை அங்கு கொண்டு வந்தனர். அன்று இரவே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிவிட்டு சென்று விட்டனர். தற்போது விசாரணையில் சிக்கி கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வேந்தர்பாலா, அலெக்ஸ்பாண்டியன் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தநிலையில், தலைமறைவான கருப்பையாவை தேடி வருகின்றனர்.