📅 Friday, 10 July 2026 IST | ஆனி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 10, 2026 08:31 PM

விருதுநகர் இளைஞர்களே.. 25% மானியத்துடன் தொழில் கடன்: அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பு!

விருதுநகர் இளைஞர்களே.. 25% மானியத்துடன் தொழில் கடன்: அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பு!

விருதுநகர் இளைஞர்களே.. 25% மானியத்துடன் தொழில் கடன்: அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பு!

வியாபாரத் தொழில்களுக்கு மட்டும் அதிகப்பட்ச தொகையாக ரூ.15.00 இலட்சம் வரை கடனுதவியாகப் பெறலாம். இக்கடனுக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் மானியமாக பெற்று பயன்பெறலாம்.

மானியத்துடன் கூடிய தொழில் கடனுதவி பெற தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.

தொழில் கடனுதவி பெற தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம்தமிழக அரசு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வேலைதேடும் இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்காக 25 % மானியத்தில் தொழில் கடனுதவி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற 18 முதல் 45 வயது வரையுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், சிறப்பு பிரிவினரான ஆதி திராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநர் ஆகியோர்கள் 55 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் வழியாக விண்ணப்பித்து அரசு மான்யத்தை பெற்று பயன்பெறலாம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டு வருவதால் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து அரசு மான்யத்தை பெற்று பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தொழில் மையத்தினை நேரிலோ அல்லது (04562-252739) என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி