தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க ஐகோர்ட் தடை
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்தனர். இதனையடுத்து திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் கொண்ட பெஞ்ச், 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதித்தனர். மேலும் அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்ததுடன், மத்திய அரசு, முதல்வர் விஜய், சட்டசபை செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.