📅 Friday, 10 July 2026 IST | ஆனி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 10, 2026 03:33 PM

தவெக எம்எல்ஏவிடம் பேரம்: சிங்கப்பூர் வர்த்தகருக்கு ‘லுக்

தவெக எம்எல்ஏவிடம் பேரம்: சிங்கப்பூர் வர்த்தகருக்கு ‘லுக்

சென்னை: தவெக ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தொடரப்பட்ட வழக்கில் மூளையாகச் செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் வர்த்தகர் லட்சுமண பெருமாளுக்கு எதிராக சென்னை காவல்துறையினர் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

சட்​டப்​பேர​வை​யில் பேர​வைத்தலை​வருக்கு எதி​ராக நம்​பிக்​கை​யில்லாத் தீர்​மானம் கொண்டு வரப்​பட்​டால் அதை ஆதரிக்க ரூ.35 கோடி பேரம் பேசப்​பட்​ட​தாக ஊத்​தங்​கரை தொகுதி தவெக எம்​எல்ஏ. இளை​ய​ராஜா புகார் அளித்​திருந்​தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து சென்னை அரும்பாக்கத்தைச் சே;ந்த திருநாவுக்கரசு, திருச்சி நரேஷ், மேடவாக்கம் தியாகராஜன் ஆகியோர் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ராஜசேகர், சேதுராஜன் ஆகிய மேலும் இருவர் கைதாகியுள்ளனர். அவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கைதானவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது அவர்களில் ஒருசிலர் அளித்த தகவலின் அடிப்​படை​யில், முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி, அவரது சகோ​தரர் அசோக்​கு​மார் ஆகியோரை விசா​ரிக்க காவல்துறை அழைப்பாணை அனுப்​பிய நிலை​யில், இரு​வரும் உயர் நீதி​மன்​றத்​தில் முன்பிணை பெற்​றனர்.

கைதான ஒன்பது பேரின் வீடு​களில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் முக்​கிய ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. கைப்பேசியில் வந்த அழைப்புகளையும் அதிகாரிகள் ஆராய்ந்தனர்.

அப்போது, கைதானவர்களில் ஒருவர் சிங்கப்பூரைச் சேர்ந்த லட்சுமண பெருமாள் என்னும் வர்த்தகருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

லட்சுமண பெருமாள் சென்னை வந்து இவர்​களை சந்​தித்​துப் பேசி​ய​தாக​வும் கூறப்​படு​கிறது. எல்எல்ஏவுக்கு லஞ்சம் கொடுப்பது தொடர்பாக சென்னை கிண்​டி​யில் உள்ள பிரபல நட்​சத்​திர ஹோட்​டலில்அவ்ரகள் அனைவரும் தங்கி ரகசிய ஆலோ​சனை​கள் நடத்தியதும் தெரிய வந்​த​து.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இதையடுத்​து, லட்​சுமண பெரு​மாள் குறித்து காவல்துறையின் தனிப்​படையினர் விசா​ரணையை தீவிரப்​படுத்​தினர்.

அதுபற்றி அறிந்ததும் லட்​சுமண பெரு​மாள் சிங்​கப்​பூருக்கு தப்​பிச் சென்​றுவிட்டதாகக் கூறப்பட்டது.

மேலும், சிங்கப்பூரில் இருந்தபடியே தொழில்​நுட்ப உதவி​யுடன் சென்னை ஹோட்​டலின் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவு​கள் மற்​றும் வழக்​குக்குத் தொடர்​புடைய சில மின்னிலக்க ஆதா​ரங்​களை அழிக்க அவர் முயன்​ற​தாக விசாரணை அதிகாரிகள் கூறினர்.

அதனால் லட்சுமண பெருமாள் இந்தியாவில் இருந்தால் வெளி​நாடு​களுக்கு மேலும் தப்​பிச் செல்​லாமல் தடுக்​க​வும் இந்​தி​யா​வுக்​குள் நுழைந்​தால் உடனடியாகக் கைது செய்​ய​வும் சென்னை காவல்துறையினர் அவருக்கு எதி​ராக அனைத்து விமான நிலை​யங்​களுக்​கும் ‘லுக்​-அவுட் நோட்​டீஸ்’ பிறப்​பித்​துள்​ளனர்.

அத்துடன், அவரது கைப்பேசிப் பயன்​பாடு மற்​றும் இருப்​பிடத்தை இணையக் குற்றத் தடுப்புக் காவல்துறையினர் தொடர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர்.