📅 Friday, 10 July 2026 IST | ஆனி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 10, 2026 02:31 PM

ஊசலாடும் உயர்கல்வித் துறை! கண்டுகொள்வாரா காங்கிரஸ் அமைச்சர்? பாஜக கேள்வி

ஊசலாடும் உயர்கல்வித் துறை! கண்டுகொள்வாரா காங்கிரஸ் அமைச்சர்? பாஜக கேள்வி

ஊசலாடும் உயர்கல்வித் துறை! கண்டுகொள்வாரா காங்கிரஸ் அமைச்சர்? பாஜக கேள்வி

தமிழக உயர்கல்விக்கு ஆபத்து! முதல்வர், ஆசிரியர் பற்றாக்குறை: அரசுக்கு பாஜக கடும் கண்டனம்

உயர் கல்வித்துறையில் பல்வேறு கல்லூரிகளில் முதல்வர்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக கல்வித் தரம் கேள்விக் குறியில் இருப்பதாகவும் இதனால் மாணவர் சேர்க்கை முறையாக நடக்கவில்லை எனவும் பாஜக கடுமையாகச் சாடி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 125 கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளை ஆளும் தவெக அரசும், உயர்கல்வித் துறை அமைச்சரான விஸ்வநாதனும் சற்று கவனமாக கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரசுக் கல்லூரிகளில் இடம்

முந்தைய திமுக ஆட்சியில் அரசு கல்லூரிகள் அலட்சியப்படுத்தப்பட்டதன் விளைவால் தான், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விகிதம் பெருமளவு குறைந்து போனது. ஒரு காலத்தில் அரசு கல்லூரிகளில் இடம் கிடைப்பது, மிகப்பெரும் சாதனையாகவும், வளமான எதிர்காலத்திற்கான திறவுகோலாகவும் கருதப்பட்டது.

அரசு இயந்திரத்திற்கே அவமானம்

எனவே, சுமார் அரை நூற்றாண்டிற்கு பிறகு தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதன், கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைந்து கொண்டிருக்கும் உயர் கல்வித் துறையை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்’’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards. She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி