📅 Friday, 10 July 2026 IST | ஆனி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 10, 2026 03:33 PM

பைக் வாங்க ரூ.50 ஆயிரத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு.! விண்ணப்பிக்க அழைப்பு

பைக் வாங்க ரூ.50 ஆயிரத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு.! விண்ணப்பிக்க அழைப்பு

பைக் வாங்க ரூ.50 ஆயிரத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு.! விண்ணப்பிக்க அழைப்பு- யாருக்கெல்லாம் தெரியுமா.?

சென்னை மாவட்டத்தைச் சார்ந்த உலமாக்களுக்கு இரு சக்கர வாகன வாங்க மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 15.7.2026 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் திட்டங்கள்

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு மானியத்தில் கடன் உதவித்திட்டம், கம்மியான வட்டியில் கடன் உதவி என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதே போல மகளிர்கள் சுயமாக முன்னேறும் வகையில் மகளிர் சுய உதவிக்குழு மூலமாகவும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க ரூ.50 ஆயிரம் மானிய உதவியானது வழங்கப்படுகிறது.

இரு சக்கர வாகனம் வாங்க மானியம்

இது தொடர்பாக சென்னை சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.50,000/-வழங்க தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டு தமிழ்நாட்டிலுள்ள பள்ளி வாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள்,

விண்ணப்பிப்பதற்கான அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்போது மேற்படி திட்டத்தில் பயன் பெற கால அவகாசம் 30.6.2026-15 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் 15.7.2026-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி