📅 Friday, 10 July 2026 IST | ஆனி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 10, 2026 03:31 PM

இன்ஸ்டகிராம் மூலம் மாதம் ரூ.50 லட்சம் வரை சம்பாதிக்கும் ஸ்ரீலீலா

இன்ஸ்டகிராம் மூலம் மாதம் ரூ.50 லட்சம் வரை சம்பாதிக்கும் ஸ்ரீலீலா

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீலீலா, தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘ஓம்’ திரைப்படத்தில் சாய் பல்லவியுடன் இணைந்து மற்றொரு நாயகியாக நடித்து வருகிறார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வரும் இவர், பாலிவுட்டிலும் சில இந்தித் திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் பெற்று வருகிறார்.

திரைப்படங்கள் ஒருபுறமிருக்க, சமூக ஊடகமான இன்ஸ்டகிராமிலும் ஸ்ரீலீலா மிகவும் பிரபலமாக உள்ளார்.

தனது புகைப்படங்கள், அன்றாடத் தகவல்களைப் பகிர்ந்து ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துவரும் இவரை, இன்ஸ்டகிராமில் மட்டும் ஏறத்தாழ 17 மில்லியன் (1.7 கோடி) பேர் பின்தொடர்கிறார்கள்.

இதுபோல் அசுர வேகத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்களின் தயாரிப்புகளை விளம்பரம் செய்ய ஸ்ரீலீலாவை அணுகி வருகின்றன.

தனது பக்கத்தில் வெளியிடும் ஒவ்வொரு ‘ஸ்பான்சர்’ விளம்பரத்திற்கும் தலா 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய்வரை ஸ்ரீலீலா கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.

இதன்மூலம், விளம்பரங்கள் வாயிலாக மட்டுமே ஒரு மாதத்திற்குச் சராசரியாக 30 முதல் 40 லட்சம் ரூபாயும் சில மாதங்களில் அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரையிலும் அவர் வருமானம் ஈட்டி வருவதாகத் திரையுலக வட்டாரங்களில் தகவல் பரவி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்படங்களில் நடித்துக்கொண்டே தனது மருத்துவப் படிப்பைத் தொடர்ந்துவந்த ஸ்ரீலீலா, 2026 பிப்ரவரி மாதத்தில் தனது எம்பிபிஎஸ் படிப்பை வெற்றிகரமாக முடித்து அதிகாரபூர்வமாக ஒரு மருத்துவராகத் தகுதி பெற்றுள்ளார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மூன்றாவது குழந்தை தத்தெடுப்பு

ஏற்கனவே 2022ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இருவரைத் தத்தெடுத்து வளர்த்துவந்த ஸ்ரீலீலா, கடந்த 2025ஆம் ஆண்டில் மூன்றாவதாக ஒரு குழந்தையையும் தத்தெடுத்துள்ளார். அக்குழந்தைகளின் முழு படிப்பு, மருத்துவச் செலவுகளை அவரே ஏற்றுக்கொண்டு ஆதரவற்றோர் இல்லத்தில் வைத்துப் பராமரித்து வருகிறார்.