நீரஜ் சோப்ரா தலைமையில் 126 பேர் கொண்ட இந்திய காமன்வெல்த் அணி அறிவிப்பு.. விளையாட்டுடன் முழு பட்டியல்
நீரஜ் சோப்ரா தலைமையில் 126 பேர் கொண்ட இந்திய காமன்வெல்த் அணி அறிவிப்பு.. விளையாட்டுடன் முழு பட்டியல்
டெல்லி: 2026ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த விளையாட்டு தொடருக்கு தகுதி பெற்றுள்ள 126 வீரர்கள் அடங்கிய இந்திய அணிக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இந்த அனுமதி உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு வாரியான பட்டியல் மற்றும் வீரர்களின் விரிவான பெயர்ப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை கிளாஸ்கோ நகருக்கு செல்லும் இந்தியக் குழுவில் 78 ஆண்கள், 48 பெண்கள் என மொத்தம் 126 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இது தவிர 51 பயிற்சியாளர்கள் மற்றும் உதவி ஊழியர்கள், 14 குழு அதிகாரிகள் என ஒட்டுமொத்தமாக 191 பேர் கொண்ட குழுவினர் இந்தியாவிலிருந்து புறப்பட உள்ளனர். இந்த ஒட்டுமொத்த இந்திய குழுவிற்கான முதன்மை நிர்வாகியாக ரோஹித் ராஜ்பால் நியமிக்கப்பட்டுள்ளார். ரவி பெங்கானி, வந்தனா ராவ் மற்றும் ராகுல் சுவாமி ஆகியோர் துணை நிர்வாகிகளாக செயல்பட உள்ளனர்.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா களம் இறங்குகிறார். அவரைத் தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பழுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் ஆகியோர் இந்திய அணியின் நட்சத்திரங்களாக முன்னிலை வகிக்கின்றனர்.
குத்துச்சண்டை:
டிராக் சைக்கிளிங்:
ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ்:
லான் பௌல்ஸ்:
பழுதூக்குதல்:
மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் (Para Athletics):
பெண்கள் 3x3 சக்கர நாற்காலி கூடைப்பந்து (3x3 Wheelchair Basketball):
மாற்றுத்திறனாளிகளுக்கான பவர்லிஃப்டிங் (Para Powerlifting):
மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் (Para Swimming):
மாற்றுத்திறனாளிகளுக்கான டிராக் சைக்கிளிங் (Para Track Cycling):