Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
தமிழ் சினிமாவில் தன்னை பல பரிணாமங்களில் வெளிக்காட்டி வந்த செழியன் உடல்நலக்குறைவு காரணமாக தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா.செழியன் உடல்நலக்குறைவால் காலமான செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் செழியன். தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனிடையே இவர் இயக்கி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு மத்திய அரசின் தேசிய விருதையும் டூ லெட் என்ற படம் பெற்றது. பரதேசி படத்துக்காக லண்டன் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதையும் செழியன் வென்றிருந்தார். அதுமட்டுமல்லாமல் சினிமா ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற உலக சினிமா என்ற நூலையும் செழியன் எழுதியிருந்தார்.
செழியனின் திரைப்பயணம்
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செழியன். இவர் பொறியியல் படிப்பை முடித்த நிலையில் சினிமா மீதான ஈர்ப்பு காரணமாக திரைத்துறைக்குள் நுழைந்தார். ஒளிப்பதிவில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்த செழியன், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக தொடக்கத்தில் பணியாற்றினார். அதேசமயம் இயக்கத்தையும் கற்றுக்கொள்ளும் வண்ணம் சில படங்களில் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இப்படியான நிலையில் சீமான் இயக்கத்தில் வெளியான தம்பி படத்தில் பணியாற்றும் வாய்ப்பு செழியனுக்கு கிடைத்தது.
அந்த படத்தில் வித்யாசாகர் இசையில் இடம்பெற்ற சுடும் நிலவு.. சூடாத சூரியன் பாடலை படமாக்கும் வாய்ப்பு செழியனுக்கு கிடைக்க அதனை அற்புதமாக காட்சிப்படுத்தியிருந்தார். இதனைப் பார்த்து விட்டு தான் இயக்குநர் பாலாஜி சக்திவேல் தனது கல்லூரி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற வாய்ப்பு வழங்கினார்.
Also Read: Actress Kousalya: 3 பிள்ளைகள் இருக்குன்னு தெரிஞ்சும் செந்தாமரையுடன் திருமணம்.. நடிகை கௌசல்யா பகிர்ந்த தகவல்!
தொடரும் சோக சம்பவங்கள்
தமிழ் சினிமாவில் சமீப காலமாக அடுத்தடுத்து பிரபலங்கள் மரணமடைவது ரசிகர்களிடையே தாங்க முடியாத ஒரு துயரத்தை உண்டாக்கியுள்ளது. கடந்த மாதம் இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் கே.பாக்யராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். அதிலிருந்து மீண்டு வருவதற்குள் மீண்டும் ஒரு பிரபலம் மறைவு நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி