Cinema
September 07, 2026 11:01 PM
அபிஷன் ஜீவிந்த், சிவராஜ்குமார் நடிக்கும் 'பிக்காசோ'!
அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படத்திற்கு ‘பிக்காசோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்துள்ள யோகலட்சுமி, சிவானி நாகராம், கானா வினோத் ஆகியோரும் நடிக்கின்றனர்.
டிராமா கம்பெனி பேனரின் கீழ் ஏ. பாலமுருகன் இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். படம் குறித்த பிற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி, வித் லவ்
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த், வித் லவ் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
தொடர்புடைய செய்திகள்
Cinema