மக்களுக்குப் பிடித்ததை செய்ததால்தான் திரைத்துரையில் நீடிக்கிறேன்
‘ஜெயிலர் 2’ படத்தில் ஒரு பாடலில் தமன்னாவை ஆட வையுங்கள் என தான்வைத்த கோரிக்கையை இயக்குநர் நெல்சன் நிராகரித்து விட்டதாக ரஜினி கூறியுள்ளார்.
ரஜினி – நெல்சன் கூட்டணி
நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், நடிகர் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், சுராஜ், வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, யோகி பாபு உள்பட பலர் நடிக்கின்றனர்.
சிறப்புத் தோற்றம்
சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் நடித்துள்ளார்கள். ஜெயிலர் முதல் பாகத்திற்கு இசையமைத்த அனிருத்தே அதன் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறாததால், உள்ளரங்கில் அனைத்து நடிகர் நடிகைகள் வைத்து ‘சூப்பர் ஷோ’ என புரமோஷன் செய்யப்பட்டது.
இதில் நடிகர் ரஜினிகாந்த் “ஜெயிலர் 2 படத்தில் தமன்னா மட்டும் மிஸ்ஸிங் . நெல்சனிடம் எப்படியாவது ஒரு பாடலுக்கு தமன்னாவை பயன்படுத்துங்கள் எனக் கூறினேன். அதற்கு நெல்சன், ‘உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்கு எல்லாம் என்னால் வைக்க முடியாது சார்’ எனக் கூறிவிட்டார்.
நான் எனக்குப் பிடிக்கும் என்பதால் கேட்கவில்லை. மக்களுக்குப் பிடிக்கும் என்பதால்தான் கேட்டேன். நான் எனக்குப் பிடித்ததை மட்டுமே வைத்திருந்தால் இந்நேரம் பெங்களூருக்கு சென்றிருப்பேன். மக்களுக்கு பிடித்ததை செய்ததால்தான் நான் இன்னும் திரைத்துரையில் நீடிக்கிறேன்” என்றார்.
‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாகத்தில் தமன்னாவின் ‘காவாலா’ பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இரண்டாம் பாகத்தில் தமன்னாவுக்குப் பதிலாக பூர்ணா, நோரா பதேகி நடனமாடி இருக்கிறார்கள்.
The laughter riot is here! 😂💥 #Jailer2 Super Show is streaming now, only on @sunnxt! 🔥🥳@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts… pic.twitter.com/jUBDY848Gl