விஜய் பிரசாரத்தில் பேசுபொருளான பதாகை... என்ன எழுதப்பட்டிருந்தது?
விஜய் பிரசாரத்தில் பேசுபொருளான பதாகை... என்ன எழுதப்பட்டிருந்தது?
விஜய்யின் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, அவரை வரவேற்க வந்த சிலர் “திமுக ஒரு தீய சக்தி” என்ற வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தியிருந்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடைத்தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வரும் முதலமைச்சர் விஜய்க்கு, வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் திரண்டு வரும் மக்கள், விஜய்யை ஆரவாரத்துடன் வரவேற்று வருகின்றனர்.
இந்நிலையில், பிரசாரத்தின்போது விஜய்யை வரவேற்க வந்த சிலர் கைகளில் “திமுக ஒரு தீய சக்தி” என்ற வாசகம் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர். இந்தக் காட்சிகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன.
முதலமைச்சர் விஜய் தனது பிரசாரங்களில் திமுகவை விமர்சித்து வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியிலும் அதே வாசகம் இடம்பெற்ற பதாகைகள் காணப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக பேசுபொருளாகியுள்ளது.
விஜய்யின் பிரசாரத்துக்கு கிடைக்கும் வரவேற்பு தொடர்பான காட்சிகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில், “திமுக ஒரு தீய சக்தி” என்ற பதாகைகளுடன் மக்கள் அவரை வரவேற்ற காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.