📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 04, 2026 12:00 PM

TN Govt: பதவிகளை குறைத்து, பணத்தை மிச்சைப்படுத்த விஜய் அரசு முடிவு..! காலியாகும்

TN Govt: பதவிகளை குறைத்து, பணத்தை மிச்சைப்படுத்த விஜய் அரசு முடிவு..! காலியாகும்

TN Govt: பதவிகளை குறைத்து, பணத்தை மிச்சைப்படுத்த விஜய் அரசு முடிவு..! காலியாகும் அரசுப் பணியிடங்கள், யாருக்கு ஆப்பு?

TN Govt Job: அவசியமில்லாத பணியிடங்களை ரத்து செய்து செலவினங்களை குறைக்க தமிழ்நாடு அரசு ,முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TN Govt Job: தமிழ்நாடு அரசின் புதிய ஆட்குறைப்பு நடவடிக்கையால் யார் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்பது குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

செலவை குறைக்க தமிழ்நாடு அரசு திட்டம்:

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்ற பிறகு, அரசின் அநாவசியமான செலவினங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். அதோடு தாய்மாமன் தங்க மோதிர திட்டம், வெற்றிப் பயண திட்டம், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு விரிவாக்கம் மற்றும் 200 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் என பல அதிரடி திட்டங்களையும் தொடங்கிவைத்துள்ளார். இதற்கான அரசின் வருவாயை பெருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்காக மதிப்பிடப்பட்டதை காட்டிலும் கூடுதல் செலவுகளுடன் வெளியான பல்வேறு திட்டங்களுக்கான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் நீட்சியாக அனைத்து துறைகளிலும் உயரதிகாரிகளின் பதவிகளை குறைத்து, அவசியமில்லாத பணியிடங்கள் ரத்து உள்ளிட்ட சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தலைமை செயலக வாட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசின் வரவு, செலவு விவரங்கள்..!

தமிழ்நாடு அரசுக்கு சொந்த வரி வருவாய், வரி அல்லாத வருவாய், மத்திய அரசின் மானியங்கள் போன்றவை வாயிலாக வருவாய் கிடைக்கிறது. அரசின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் மொத்த வருவாயாக, 3.50 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் எனவும், மொத்த செலவு, 4.05 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டு உள்ளது. இதில் பணியாளர்களுக்கான சம்பள செலவு, 77,310 கோடி ரூபாயும், கடன்களுக்கான வட்டியின் பங்கு, 76,452 கோடி ரூபாயாகவும், மானியங்கள் பங்கு, 1.72 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

வருவாயை பெருக்க தீவிரம்..!

இதுபோக மகளிருக்கு ரூ.2,500 உதவித்தொகை, விலையில்லா கேஸ் சிலிண்டர், வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை என்பது போன்ற தவெகவின் இன்னும் ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது. இதற்காக நிதியை திரட்ட அரசின் வருவாயை உயர்த்துவதில் அரசு தீவிரமாக உள்ளதாம். அதன்படி, உயர் மதிப்பில் வெளியான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதோடு, டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை, கனிமங்கள் விற்பனையில் முறைகேடு தடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆன்லைனிலேயே பத்திரப்ப்பதிவு மட்டுமின்றி ஆன்லைனிலேயே அரசின் பெரும்பாலான சேவைகளுக்கான வழிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பெறப்படும் சேவைக்கட்டணம் அரசின் கஜானாவிற்கு வலுசேர்க்கும் என கூறப்படுகிறது.

ஆட்குறைப்பு திட்டம்?

வருவாயை பெருக்கும் மற்றொரு நடவடிக்கையாக அரசின் அனைத்து துறைகளும் சீரமைக்கப்பட உள்ளனவாம். குறிப்பாக, ஒவ்வொரு துறையிலும் அதிகளவில் உள்ள உயரதிகாரிகளின் பணியிடங்களை குறைப்பது, அவசியம் இல்லாத பணியிடங்கள் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனவாம். வணிக வரி துறையில் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் பணியிடங்களை குறைக்வும் திட்டமிடப்பட்டு வருகிறதாம். இதேபோல், பல துறைகளில் பணியிடங்களில் அவசியம், அவசியமில்லாத விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் யாரின் பணிக்கும் பாதிப்பு இருக்காது எனவும், பணியிடங்கள் மட்டுமே குறைக்கப்பட்டு அரசின் செலவினங்கள் குறைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அரசு பணியாளர்களுக்கான ஊதிய செலவே ஓராண்டிற்கு 77 ஆயிரத்து 310 கோடி ரூபாயாக உள்ள நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி