📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 04, 2026 11:03 AM

Baththa Day 3 Box Office

Baththa Day 3 Box Office

சென்னை: பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கும் பத்தா திரைப்படம் கடந்த ஒன்றாம் தேதி வெளியானது. இதில் அவருக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் அப்படத்துக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் அதன் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜய் சேதுபதி இப்போது இந்திய அளவில் திரைத்துறையில் பிரபலமாக இருப்பவர். ஆனால் அவருக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் என்றால் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும். அப்படத்தை இயக்கியவர் பாலாஜி தரணிதரன். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகுதான் சேதுவின் வாழ்க்கையே மாறியது. தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை அவர் பிடித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு சில வருடங்கள் கழித்து பாலாஜி இயக்கத்தில் சீதக்காதி படத்தில் நடித்தார். அது தோல்வியடைந்தாலும் நல்ல பெயரை பெற்றது.

பத்தா கூட்டணி: இப்போது நீண்ட வருடங்கள் கழித்து பத்தா படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள் அவர்கள். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். படத்தின் போஸ்டர், ட்ரெய்லர் எல்லாம் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு பற்ற வைத்தன.கண்டிப்பாக இந்தப் படத்தை பெரிய வெற்றி படமாக கொடுப்பார்கள் என்று கருதப்பட்டது.

அப்படியே நடந்தது: ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அதே ரிசல்ட்தான் படத்துக்கு கிடைத்திருக்கிறது. டான் ஜானரில் உருவாகியிருக்கும் படமாக ட்ரெய்லர் பிம்பத்தை செட் செய்திருந்தாலும்; பாலாஜி தரணிதரன் அதை வைத்து மட்டுமே படத்தை கொடுக்கவில்லை. டான் ஜானரில் ஒரு ஃபீல் குட் படத்தை கொடுத்து அசத்திவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அனைவருமே படத்தை முழு மனதோடு பார்த்து திருப்தியடைந்தார்கள்.

குழந்தை நட்சத்திரம் சூப்பர்: படத்தின் முக்கியமான ஹைலைட்டாக இருப்பது குழந்தை நட்சத்திரம் சாய்தான். ஒவ்வொரு ஃப்ரேமிலும் அந்த சிறுவன் நடிப்பால் மெர்சல் செய்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது நடிப்புக்கு கண்டிப்பாக தேசிய விருது கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் வலுத்திருக்கின்றன. ஆகமொத்தம் பத்தா படம் சூப்பராக பந்தயம் அடித்துவிட்டது.

வசூல் நிலவரம்: விமர்சன ரீதியாக கொண்டாடப்படும் படம் வசூலிலும் சக்கைப்போடு போடுகிறது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி மூன்றாவது நாளான நேற்று அப்படம் இரண்டு கோடியே 75 லட்சம் ரூபாயை அள்ளியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை அப்படம் ஆறு கோடியே 95 லட்சம் ரூபாயை வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்புகிறதாம்.