📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 04, 2026 03:03 PM

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்திய கடற்படை அதிகாரி கோவையில் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்திய கடற்படை அதிகாரி கோவையில் கைது

கோவை: பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவுத்துறை அதிகாரிக்கு கடற்படை தகவல்களைக் கசியவிட்ட புகாரில் கோவை ஐஎன்எஸ் அக்ரானியில் பயிற்சிக்கு வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கடற்படை அதிகாரி பிரதீப் முகர்ஜி கைது செய்தனர். சமூக ஊடகங்களில் தொடர்புகொண்ட உளவாளியிடம் கடற்படை தகவல்களை பகிர்ந்துள்ளார் பிரதீப் முகர்ஜி. கைது செய்யப்பட்ட கடற்படை மாலுமி பிரதீப் முகர்ஜி விஜயவாடா அழைத்து செல்லப்பட்டார்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி இந்தியக் கடற்படையில் விசாகப்பட்டினத்தைத் தளமாகக் கொண்ட கிழக்கு கடற்படையில் மாலுமியாகப் பணியாற்றி வருகின்றார். ரெட் ஃபீல்ட் பகுதியில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி மையமான ஐ.என்.எஸ் அக்ரானியில் பயிற்சிக்கு வந்த 31 வயதான ஆந்திர மாநில கடற்படை அதிகாரி பிரதீப் முகர்ஜி என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவுத்துறை அதிகாரிக்கு, இந்திய கடற்படை ரகசிய பாதுகாப்புத் தகவல்களைக் கசியவிட்டதாக ஆந்திரப் பிரதேச காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி இந்தியக் கடற்படையில் விசாகப்பட்டினத்தைத் தளமாகக் கொண்ட கிழக்கு கடற்படையில் மாலுமியாகப் பணியாற்றி வருகின்றார். கோவை INS அக்ரானியில் நடைபெறும் மேலாண்மை மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த ஒரு வாரமாக தங்கி இருந்தார்.

இந்த நிலையில் சமூக ஊடகங்களில் ஒரு பாகிஸ்தானிய பெண் உளவாளி அவரை தொடர்பு கொண்டதாகவும், அந்த உளவாளியிடம் விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்துடன் தொடர்புடைய தகவல்களை பிரதீப் முகர்ஜி பகிர்ந்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் புகாரின் பேரில், ஆந்திரப் பிரதேச காவல்துறையில் பயங்கரவாதக் குழுக்கள், எல்லை தாண்டிய உளவு மற்றும் உயர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கவனம் செலுத்தும் CI சிறப்புப் பிரிவு இது குறித்து விசாரித்து வந்தது. அதன்படி, அவரை கைது செய்ய இந்திய கடற்படை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர்.

ஆந்திர மாநில CI சிறப்பு குழு சனிக்கிழமை காலை கோவை INS அக்ரானியில் வைத்து இந்திய கடற்படை மாலுமி பிரதீப் முகர்ஜியை கைது செய்தனர். தொடர்ந்து அவரை ஆந்திரா மாநிலம் விஜயவாடா அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.