📅 Friday, 10 July 2026 IST | ஆனி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 21, 2026 07:32 AM

 பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றமளிக்கிறது; விவசாயிகள் சங்கம் வேதனை

 பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றமளிக்கிறது; விவசாயிகள் சங்கம் வேதனை

ராமநாதபுரம்: கூட்டுறவு பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றத்தைஅளிப்பதாக வேதனை தெரிவித்த தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் தேர்தலின் போதுகொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் விஜய்நிறைவேற்ற வேண்டும் எனவலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரத்தில் சங்க நிறுவன தலைவர் பாக்கியநாதன் கூறியதாவது: தமிழக வெற்றிக்கழகம் தேர்தலின் போதுஆட்சிக்கு வந்த உடனே 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளின் முழு பயிர்க்கடனும், அதற்கு மேல்உள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடன் 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தது.கூட்டணி ஆட்சி அமைந்த உடன் மே 25ல்ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டது. பிறகு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதையடுத்து மீண்டும்விவசாயிகளின் கடன் சுமை, பொருளாதார இழப்புகளை கருத்தில் கொள்ளாமல்கூட்டுறவு பயிர்க்கடன்கள் ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி என தமிழக வெற்றிக்கழக அரசு அறிவித்துள்ளது ஏமாற்றத்தை தந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநில அரசு ரூ.36 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி தொகையாகவும், சீராக பயிர் கடன் செலுத்திய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கியும், நீண்ட கால கடன்களை தள்ளுபடியும் செய்துள்ளது. தமிழகத்தில் மூன்று போகம் விவசாயம் செய்துகடன் சுமையில் விவசாயிகள் தவிக்கின்றனர்.

இப்பிரச்னையில் மீண்டும் விவசாயிகளை போராடத்துாண்ட வேண்டாம். எனவே தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு பயிர்க்கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். அதற்கு முதல்வர் விஜய் உத்தரவிட வேண்டும் என்றார்.