Rail One செயலி மூலம் எடுக்கப்படும் ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு கட்டுப்பாடு: இந்திய ரயில்வே அறிவிப்பு
Rail One' செயலி மூலம் எடுக்கப்படும் ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு கட்டுப்பாடு: இந்திய ரயில்வே அறிவிப்பு
டெல்லி: முன்பதிவு இல்லாத (Unreserved) டிக்கெட்களை Rail One செயலி மூலமாக பதிவு செய்தால், அதை நேரடியாக போனில் காட்டினால் மட்டுமே செல்லுபடியாகும். ஸ்கிரீன்ஷாட்கள், PDF, WhatsApp Forward-கள் ஏற்றுக் கொள்ளப்படாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் இந்திய ரயில்வே மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வேயின் புதிய Rail One செயலி மூலம் எடுக்கப்படும் முன்பதிவு இல்லாத (Unreserved) டிக்கெட்டுகள் குறித்து ரயில்வே நிர்வாகம் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் டிக்கெட்டுகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், போலி டிக்கெட் மோசடிகளைத் தவிர்க்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Rail One செயலி மூலம் 'அன்-ரிசர்வ்டு' டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகள், பயணத்தின் போது தங்களின் மொபைலில் உள்ள செயலியை நேரடியாகத் திறந்து காண்பித்தால் மட்டுமே அது செல்லுபடியாகும் என இந்திய ரெயில்வே மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. டிக்கெட்டுகளின் ஸ்கிரீன்ஷாட்டுகள்,
PDF வடிவங்கள், வாட்ஸ்அப் பார்வேர்டுகள்(WhatsApp Forward) ஆகியவை எக்காரணம் கொண்டும் பயணச் சீட்டாக ஏற்றுக்கொள்ளப்படாது.
டிடிஇ பரிசோதனையின் போது போனில் செயலியை நேரடியாகக் காட்டாமல், ஸ்கிரீன்ஷாட்டோ அல்லது வாட்ஸ்அப் பார்வேர்டோ காண்பித்தால், அவர்கள் டிக்கெட் இல்லாத பயணிகளாகவே கருதப்படுவார்கள். அவர்களுக்கு ரயில்வே விதிமுறைகளின்படி கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
இச்செயலி மூலம் எடுக்கப்படும் சாதாரண லோக்கல் டிக்கெட்டுகள் எடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து 2 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும். எனவே, முன்கூட்டியே டிக்கெட் எடுத்து வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ரயில் நிலையங்களுக்குள் சில நேரங்களில் சிக்னல் கிடைக்காமல் போகலாம் என்பதால், பயணிகள் தங்களின் 'Rail One' செயலியில் உள்ள 'Show Ticket' வசதியை முன்கூட்டியே சோதித்துக் கொள்வது அவசியமாகும்.
\n ${e.display_status||e.scheduleTime}\n
\n ${e.display_status+", "+e.scheduleTime}\n