📅 Friday, 10 July 2026 IST | ஆனி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 10, 2026 01:31 PM

விஜய்யுடன் சந்திப்பு.. பொக்கிஷ தருணம்.. கவின் பெருமிதம்.. செம ஹேப்பியா இருக்காரு பாஸ்

விஜய்யுடன் சந்திப்பு.. பொக்கிஷ தருணம்.. கவின் பெருமிதம்.. செம ஹேப்பியா இருக்காரு பாஸ்

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் கவின். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஐந்து படங்களில் டாடா படம் மட்டுமே சூப்பர் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஹாய் படத்தில் நடிக்கிறார். இதில் அவருடன் நடிகை நயன்தாராவும் நடிக்கிறார். இந்நிலையில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்தது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் கவின்.

திருச்சியை சேர்ந்தவர் கவின். நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்தவருக்கு; முதலில் சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் சென்றார். தொடர்ந்து இயங்கி கொண்டிருந்த அவருக்கு திரைத்துறை கதவுகள் திறந்தன. தொடர்ச்சியாக படங்களில் நடித்த அவருக்கு டாடா திரைப்படம் சூப்பர் ஹிட்டை கொடுத்தது.

தொடர் தோல்வி: அந்தப் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு நடித்த ஸ்டார், ப்ளடி பெக்கர், மாஸ்க் ஆகிய மூன்று படங்களும் சரியாக போகவில்லை. அதேசமயம் அம்மூன்று படங்களிலும் கவினின் நடிப்பு வெகுவாகவே பாராட்டப்பட்டது. முக்கியமாக ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசமான நடிப்பையும், கெட்டப்பையும் கொடுத்திருந்தார். தனக்கு இன்னும் அதிகம் திறமை இருப்பதை அந்தப் படங்களின் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார் அவர்.

விஷ்ணு எடவன் இயக்கத்தில்: இப்போது அவர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஹாய் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதில் அவருடன் நயன்தாராவும் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர்தான் இந்த விஷ்ணு எடவன். லோகேஷின் படங்களில் முதுகெலும்பாக இருப்பவர்களில் இவரும் ஒருவர். கண்டிப்பாக லோகேஷிடம் கற்றுக்கொண்ட வித்தைகளை எல்லாம் இந்தப் படத்தில் விஷ்ணு இறக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யுடன் சந்திப்பு: சூழல் இப்படி இருக்க நடிகரும், முதலமைச்சருமான விஜய்யை கவின் நேற்று நேரில் சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பெருமிதத்தோடு போஸ்ட் செய்திருக்கிறார். மேலும் அந்தப் புகைப்படங்களோடு, "சிலர் மாட்டும்தான் அவர்கள் இருப்பதே மற்றவர்களுக்கு ஒரு உத்வேகம் கொடுக்கும்.காலம் அவருடைய பயணத்தை மாற்றியிருக்கலாம். ஆனால் அவரது பணிவும், எளிமையும் இன்னும் மாறவில்லை.

நானும் அப்படித்தான்: லட்சக்கணக்கான மக்களைப் போன்றே நானும் அவரை பெரிய திரையில் பார்த்து வளர்ந்தவன். இன்று அதே மனிதர் முதலமைச்சராக மக்களுக்கு சேவை செய்வதை பார்ப்பது தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தும் ஒரு பயணமாகவே இருக்கிறது. எனது வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக நினைவில் வைத்திருக்கும் தருணம் இது. பல ஆண்டுகளாக இருந்த என்னுடைய ஆசையை நிறைவேற்றிய ஜெகதீஷ் அண்ணாவுக்கு நன்றிகள்" என குறிப்பிட்டிருக்கிறார்.