📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 05, 2026 03:02 AM

பட்டடினம்பாக்கத்தில் தலைமை செயலகம் படகில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு

பட்டடினம்பாக்கத்தில் தலைமை செயலகம் படகில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு

சென்னை: பட்டினம்பாக்கத்தில், புதிய தலைமை செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, 10 கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் நேற்று கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சிக்கு வந்ததும், சென்னை பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என, அறிவித்து, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதற்கு, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பட்டினம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மீனவ கிராம மக்கள் அரசாணையை திரும்ப பெற வேண்டும் என, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று, நொச்சிகுப்பம் முதல், சீனிவாசபுரம், முள்ளிகுப்பம் வரை உள்ள, 10 கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள், வீடு, தங்களின் மீன் கடைகள் மற்றும் படகுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறுகையில்,‘ த.வெ.க., அரசு எங்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் நேரடியாக இங்கு வந்து பார்த்தால் தான் எங்களின் நிலையை அவர்களால் உணர முடியும்’ என்றனர்.