📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 02, 2026 03:00 AM

IND vs ENG: சார்! நீங்க துணை கேப்டன் மறந்துறாதீங்க.. பேட்டிங்கில் மீண்டும் சொதப்பிய திலக் வர்மா

IND vs ENG: சார்! நீங்க துணை கேப்டன் மறந்துறாதீங்க.. பேட்டிங்கில் மீண்டும் சொதப்பிய திலக் வர்மா

IND vs ENG: சார்! நீங்க துணை கேப்டன் மறந்துறாதீங்க.. பேட்டிங்கில் மீண்டும் சொதப்பிய திலக் வர்மா

துர்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் துணை கேப்டன் திலக் வர்மா விசித்திரமான ஷாட் விளையாட முயன்று ஆட்டமிழந்தார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அபிஷேக் சர்மாவின் ஆட்டமிழப்பிற்குப் பிறகு ஐந்தாவது வரிசையில் களம் இறங்கிய துணை கேப்டன் திலக் வர்மா மீது பொறுப்பு இறங்கியது.

அவர் ரன் வேகத்தை அதிகரிக்க முயன்றார், ஆனால் அவரால் நீண்ட நேரம் நிலைத்து நிற்க முடியவில்லை. இறுதியில் 13 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் வெளியேறினார். ஆட்டத்தின் 14-வது ஓவரின் 4-வது பந்தில், சாகிப் மஹ்மூத் வீசிய லோ ஃபுல் டாஸ் பந்தை பேட்டின் பின்புறமாக ஸ்கூப் ஷாட் ஆட திலக் வர்மா முயன்றார். இதற்காக கிரீஸின் உள்ளே நகர்ந்து அவர் விளையாடினார்.

இருப்பினும், அவர் எதிர்பார்த்தபடி பந்து பேட்டில் சரியாக படவில்லை. பேட்டின் thick edge-ல் பட்டு திசைமாறியதால், அவர் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார். ஷார்ட் ஃபைன் லெக் திசையில் நின்ற லியாம் டாவ்சன் அந்த கேட்சை எளிதாகப் பிடித்தார். முன்னதாக, அபிஷேக் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இடையே ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது.

ஆனால் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுகளால் இங்கிலாந்து அணி ஆட்டத்திற்குள் மீண்டும் திரும்பியது. திலக் வர்மாவின் ஆட்டமிழப்பிற்குப் பிறகு இந்திய அணி 124 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் கபரணமாக இந்திய அணியால் 200 ரன்களுக்கு மேல் அடிக்க முடியவில்லை.

அயர்லாந்துக்கு எதிரான கடந்த போட்டியில் அரைசதம் அடித்திருந்ததால், இந்த இங்கிலாந்து தொடரிலும் திலக் வர்மா சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக உள்ள திலக் வர்மாவுக்கு, இந்த தொடரில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டிய பெரிய பொறுப்பு உள்ளது. இந்த முதல் போட்டியில் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாவிட்டாலும், எஞ்சிய தொடரில் அவர் சிறப்பாக மீண்டு வருவார் என்று இந்திய அணி நம்புகிறது.

தனது கடைசி ஐந்து டி20 சர்வதேச இன்னிங்ஸ்களில் திலக் வர்மா ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அது அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வந்தது. எனினும், 46 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த அந்த இன்னிங்ஸ் அதிரடியாக அமையவில்லை. அவரது கடைசி ஐந்து இன்னிங்ஸ் ஸ்கோர்கள் முறையே 21, 8*, 19, 55 மற்றும் 13 ஆகும். ஐந்தாவது வரிசையில் களம் இறங்கும் திலக் வர்மாவின் ஸ்டிரைக் ரேட் சற்று கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

இனி வரும் போட்டிகளில் அதை மேம்படுத்த அவர் முயற்சிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். திலக் வர்மா இதுவரை 49 இன்னிங்சில் சர்வதேச டி20 போட்டியில் விளையாடி 1477 ரன்கள் அடித்துள்ளார். இதில் அவருடைய சராசரி 43 என்ற அளவிலும் ஸ்ட்டிக்ரேட் 142 என்ற அளவிலும் உள்ளது. இதில் 2 சதம், 7 அரைசதம் அடங்கும்.