📅 Tuesday, 14 July 2026 IST | ஆனி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 13, 2026 09:34 PM

அதிபர் டிரம்ப் உட்பட 13 உலகத் தலைவர்களை பழிவாங்க சபதம் எடுத்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி?

அதிபர் டிரம்ப் உட்பட 13 உலகத் தலைவர்களை பழிவாங்க சபதம் எடுத்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி?

அதிபர் டிரம்ப் உட்பட 13 உலகத் தலைவர்களை பழிவாங்க சபதம் எடுத்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி?

தனது தந்தை அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்க போவதாக ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சபதம் எடுத்துள்ளார். இது தொடர்பாக தெஹ்ரானை சேர்ந்த நாளிதழான ஹம்ஷஹ்ரி வெளியிட்டுள்ள ஒரு புதிய வரைபடம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட 13 உலகத் தலைவர்களை குறிவைத்து எச்சரிக்கும் விதமாக அமைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்ததும் மொஜ்தபா வெளியிட்டுள்ள முதல் பொது அறிக்கை இதுவாகும். அதில்,"பழிவாங்குவது என்பது எங்கள் தேசத்தின் விருப்பம்; அது நிச்சயம் நிறைவேற்றப்படும். பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தக் குற்றவாளிகள் யாரும் தங்களின் படுக்கையில் நிம்மதியான மரணத்தைத் தழுவ முடியாது; அந்த ஆசையுடனேயே அவர்கள் தங்களின் கல்லறைகளுக்குச் செல்வார்கள்" என்று எச்சரித்துள்ளார்.

ஹிட் லிஸ்ட்

ஈரான் நாளிதழ் வெளியிட்டுள்ள அந்த வரைபடத்தில் உலகளவில் சக்திவாய்ந்த 13 முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் குறிப்பிடத்தக்கவர்கள்:

டொனால்ட் டிரம்ப் (அமெரிக்க அதிபர்)

பெஞ்சமின் நெதன்யாகு (இஸ்ரேல் பிரதமர்)

கெய்ர் ஸ்டார்மர் (பிரிட்டன் பிரதமர்)

இம்மானுவேல் மேக்ரான் (பிரான்ஸ் அதிபர்)

மார்கோ ரூபியோ (அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்)

ஜார்ஜியா மெலோனி (இத்தாலி பிரதமர்)

பிரெட்ரிக் மெர்ஸ் (ஜெர்மனி அதிபர்)

இருப்பினும், இந்த 13 பேரும் ஈரானின் அதிகாரப்பூர்வமான ராணுவ இலக்குகள் என்று அந்நாட்டு அரசு இன்னும் முறையாக அறிவிக்கவில்லை.

இந்த வரைபடம் பத்திரிகையின் ஞாயிறு அச்சுப் பதிப்பில் இடம்பெறவில்லை என்றாலும், அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்ச் சூழலை இது மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.