📅 Tuesday, 14 July 2026 IST | ஆனி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 14, 2026 01:34 AM

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ் பணியிட மாற்றம்; போலீஸ் அகாடமி இயக்குநராக நியமினம்!

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ் பணியிட மாற்றம்; போலீஸ் அகாடமி இயக்குநராக நியமினம்!

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ் பணியிட மாற்றம்; போலீஸ் அகாடமி இயக்குநராக நியமினம்!

இந்த திடீர் நிர்வாக மாற்றம் காவல்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கான பின்னணி குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ்-ஸை தேர்தல் நேரத்தில், இந்திய தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. அந்தப் பதவிக்கு ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் அமல்ராஜை நியமனம் செய்து உத்தரவிட்டிருந்தது.

சட்டமன்றத் தேர்தல் முடிந்து, தவெக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். காத்திருப்போர் பட்டியலில் இருந்த அதிகாரிகளுக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அருண் ஐபிஎஸ்., தமிழ்நாடு ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

அந்தப் பொறுப்பை ஏற்று 45 நாள்களே ஆகியிருக்கும் நிலையில், அருண் அப்பதவியிலிருந்து திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி-யான மகேஸ்வரி, கூடுதல் பொறுப்பாக அந்தத் துறையின் இயக்குநர் பதவியை கவனிப்பார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அருண் ஐ.பி.எஸ்-ஸை, தமிழ்நாடு காவல் பயிற்சிப் பள்ளியின் கூடுதல் இயக்குநராக நியமித்திருக்கிறது.