பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்
சென்னை: பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தை, முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, பெரம்பூர் எம்எல்ஏவாக தொடர்கிறார்.
சட்டசபை தேர்தல் முடிந்த பின், தொகுதிக்கு முதல் முறையாக முதல்வர் விஜய் இன்று சென்றார். சர்மாநகரில் புதுப்பிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ அலுவலகத்தை அவர் திறந்து வைத்து பார்வையிட்டார். அங்குள்ள வசதிகள் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கினர்.
எம்எல்ஏ அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர், பூங்காத்து கொடுத்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள இ சேவை மையத்தை திறந்து வைத்ததுடன், தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றார். ரேஷன் கார்டு, பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். எம்.கே.பி.நகரில் ரேஷன் கடையில் ஆய்வு நடத்திய, ரேஷன் அட்டையை வழங்கி பொருட்களையும் வழங்கினார்.
மேலும் மக்கள் சேவை செயலியை அறிமுகம் செய்தார். தொகுதி சார்ந்த பிரச்னைகளை அந்த செயலியில் புகார்களாக பெரம்பூர் மக்கள் தெரிவிக்க முடியும்.
இதன் பிறகு வியாசர்பாடி மெட்ரோவில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வாகன சார்ஜிங் நிலையத்தையும் பார்வையிட்டார்.வியாசர்பாடி மின்சார பஸ் பணிமனையில் ஆய்வு செய்த முதல்வர் விஜய்,பஸ்சில் ஏறி அமர்ந்து தொழில்நுட்ப தகவல்களை கேட்டறிந்தார் .
பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்த நிகழ்வு தினமலர் இணையதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனைக் காண: https://www.youtube.com/watch?v=u7BTcUTdh54