📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 13, 2026 10:32 AM

Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே குஷி.! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை

Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே குஷி.! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை

Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே குஷி.! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- இன்றைய நிலவரம் இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த வாரம் ஏறி இறங்கி வந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. அதே நேரம் வெள்ளி விலையில் மாற்றமில்லை.

தங்கத்தில் முதலீடு

தங்கத்தின் விலை குறைய காரணம்.?

தங்கத்தின் விலையானது குறைய பல காரணங்கள் கூறப்படுகிறது. அந்த வகையில் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீதி தங்களது பார்வையை திருப்பியுள்ளதால் தங்கத்தின் விலையானது சரிய தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று கிராமுக்கு 100 ரூபாய் அளவு குறைந்துள்ளது. வரும் நாட்களில் போரின் அடுத்தக்கட்ட பயணத்தை தொடர்தே தங்கம் விலை ஏறுமா இறங்குமா.? என தெரியவரும்.

தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது கடந்த வாரம் ஏறி இறங்கி வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைந்து 13,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,05,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளியின் விலையானது எந்த வித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 240 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி