அண்ணாமலையின் 'We The Leaders' மாநாடு: நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்னென்ன?
அண்ணாமலையின் 'We The Leaders' மாநாடு: நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்னென்ன?
அண்ணாமலையின் "We The Leaders" மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி 'We The Leaders' என்ற இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் .
அந்த இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இயக்கத்தின் சார்பில் பொள்ளாச்சியில் நேற்று ‘போதைப்பொருள் இல்லாத தமிழகம்’ என்ற மாநாடு நடைபெற்றது.
அண்ணாமலையின் இந்த "We The Leaders" மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
* போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம்; யாரையும் பயன்படுத்த விட மாட்டோம்.
* கோயில்கள், கல்வி நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.
* காலை நேர கள்ளச்சந்தை டாஸ்மாக் விற்பனையைத் தடுக்க வேண்டும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்புத் திட்டம் உருவாக்க வேண்டும்.
* புதிய பார்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது; மறுவாழ்வு மையங்களை மேம்படுத்த வேண்டும்.
* விதிமீறலில் ஈடுபடும் FL2 பார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.