8 லட்சம் வரை இலவச இன்சூரன்ஸ் : புதிய விதியால் PF ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்
ஏற்கனவே PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக 7 லட்சம் வரை இன்சூரன்ஸ் உண்டு என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. அதனை சேர்த்து தற்போது மேலும் ஒரு சலுகையை அரசு PF ஊழியர்களுக்கு வழங்கியிருக்கின்றது. அந்த சலுகையின் படி PF ஊழியர்களுக்கு இலவசமாக 7 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தை சேர்த்து மேலும் ஒரு லட்சம் கிடைக்குமாம். அது என்ன என்பதை விரிவாக தற்போது பார்க்கலாம்ஊழியர்கள் வேலையில் இருக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக இறந்துவிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு 2 . 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை இலவசமாக இன்சூரன்ஸ் கொடுக்கப்படும். இதற்கு அந்த ஊழியர்கள் ஒரு ரூபாய் கூட கட்ட தேவையில்லை. இந்த நிலையில் தான் தற்போது கூடுதலாக ஒரு லட்சம் போனஸ் கிடைக்கும் என சொல்லப்படுகின்றது.அதாவது புதிய விதியின்படி இன்சூரன்ஸ் பணத்தை சேர்த்து உங்களுடைய PF கணக்கில் இருக்கும் சராசரி தொகையை வைத்து உங்களுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை போனஸ் கிடைக்கும். உங்களது PF கணக்கில் சராசரியாக ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்தால் அரசு ஒரு நிலையான தொகையை வழங்கும். மேலும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும் தொகைக்கு 40 % கணக்கிட்டு கூடுதலாக குடும்பத்திற்கு ஒரு லட்சம் வரை கிடைக்கும்முன்பெல்லாம் ஒருவர் வேலையை இழந்த சில நாட்களில் எதிர்பாராத விதமாக இறந்தால் அவருக்கு பணம் கிடைக்காது என்ற ஒரு ரூல்ஸ் இருந்தது. அந்த விதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. PF பணம் கட்டுவது நின்று ஆறு மாதங்கள் வரை உங்களின் குடும்பத்திற்கு 7 லட்சம் இன்சூரன்ஸ் கிடைக்கும்இந்த இன்சூரன்ஸ் வழங்குவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இருபது நாட்கள் தான் அதிக பட்சமாக எடுத்துக்கொள்ள வேண்டுமாம். இன்சூரன்ஸ் வழங்குவதற்கு விண்ணப்பித்த இருபது நாட்களுக்குள் இந்த பணம் சம்மந்தப்பட்ட குடும்பத்தாருக்கு சென்றுவிடும். ஒருவேளை இருபது நாட்களுக்கு மேல் ஆனால் விண்ணப்பித்தவர்களுக்கு அவர்களுக்கு தர வேண்டிய பணத்திற்கு மேல் 12 % வட்டியோடு சேர்த்து தரப்படும். அந்த வட்டி தாமதமாவதற்கு காரணமாக அதிகாரியின் சம்பளத்தில் இருந்தே பிடிக்கப்படும் என்ற சட்டம் வந்துள்ளதுமேலும் இது அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. எனவே இன்சூரன்ஸ் பணத்திற்காக இணையத்திலேயே நாம் விண்ணப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்