📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 05, 2026 09:03 PM

உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: 14 பயணிகள் காயம்

உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: 14 பயணிகள் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பயணிகள் காயம் அடைந்தனர்.

சென்னையிலிருந்து சுமார் 36 பயணிகளுடன் தனியார் சொகுசு பஸ் ஒன்று மதுரைக்கு நேற்று நள்ளிரவு புறப்பட்டது. பஸ்சை திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பா.பாலமுருகன் (30) ஓட்டிச் சென்றார். இந்த பஸ் இன்று அதிகாலை 5 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் ,உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள பாதூர் பஸ் ஸ்டாப் அருகே வந்த போது,

திடீரனெ சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் பாலமுருகன், பஸ் கிளீனர் பைசல் (18) உள்பட 14 பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த திருநாவலூர் போலீசாரும் , உளுந்தூர்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரர்களும் நிகழ்விடத்திற்கு சென்று , விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டனர்.

தொடர்ந்து அனைவரும் சிகிச்சைக்காக உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.