📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 28, 2026 06:03 AM

IND vs AFG ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியை எந்த சேனல், OTT

IND vs AFG ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியை எந்த சேனல், OTT

IND vs AFG ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியை எந்த சேனல், OTT-யில் பார்ப்பது? நாக் அவுட் விதி என்ன?

நிஷின்: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கிரிக்கெட் தொடரின் 2வது காலிறுதிப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆசிய கோப்பையில் இது நாக் அவுட் போட்டி என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறுவது இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகும். தோற்றால் எந்தப் பதக்கமும் இன்றி வெளியேற நேரிடும்.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் மோதும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 2வது காலிறுதி ஆட்டம் ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி காலை 10:00 மணிக்கு ஆட்டம் தொடங்கும். போட்டி தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக, அதாவது காலை 9:30 மணிக்கு டாஸ் போடப்படும்.

தொலைக்காட்சி நேரலை: இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை சோனி டென் தொலைக்காட்சி சேனல்களில் நேரடியாகக் காணலாம். ஆன்லைன் நேரலை: மொபைல் மற்றும் இணையதளத்தில் பார்க்க விரும்புபவர்கள் சோனி லைவ் செயலியில் காலை 10:00 மணி முதல் போட்டியை கண்டுகளிக்கலாம்.

இந்த காலிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறி தங்கப் பதக்க வாய்ப்பை தக்கவைக்கும். தோல்வியடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும். இந்திய அணி தனது முந்தைய லீக் போட்டியில் மழையால் 5 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டத்தில் ஜப்பான் அணியை வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. அந்த போட்டியில் பேட்டிங் சற்று தடுமாறியதால், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய பேட்டர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே வெல்ல முடியும்.

இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் என வலிமையான வீரர்கள் உள்ளனர். ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய சீனியர் வீரர்கள் சிலர் இல்லாவிட்டாலும், டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் எப்போதுமே அதிர்ச்சி அளிக்கக்கூடிய அணி என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்திய அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர், யாஷ் தாக்குர், வைபவ் சூர்யவன்ஷி, விப்ராஜ் நிகம்.

ஆப்கானிஸ்தான் அணி: தர்விஷ் ரசூலி (கேப்டன்), முகமது இஷாக், முகமது அக்ரம், ஹசன் ஈசாகிஸ், கரீம் ஜனத், பைசல் ஷினோசாதா, நஜிபுல்லா ஜத்ரான், நங்கேலியா கரோட்டி, அப்துல்லா அகமத்சாய், ஃபரிதூன் தாவூத்சாய், அரப் குல் மோமண்ட், இஸ்மத் ஆலம், ஃபர்மனுல்லா சாஃபி, காலித் தனிவால், இம்ரான் மிர்.