📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 22, 2026 09:01 PM

அக். முதல் வாரம் தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி

அக். முதல் வாரம் தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி

புதுடெல்லி,

தமிழகத்​தில் இளைஞர்​களை பெரு​மள​வில் காங்​கிரசில் சேர்க்க​வும், தொண்​டர்​களிடையே அரசி​யல் விழிப்​புணர்வை ஏற்​படுத்​த​வும் அகில இந்​திய தலை​வர்​கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் தமிழகத்​திற்கு வருகை தந்து பல்​வேறு பொதுக்​கூட்​டங்​கள் மற்​றும் கட்சி நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​கத் திட்​டம் வகுக்​கப்​பட்டுள்​ளது.

அந்தவகையில், சென்னையில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். மேலும் சில நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக். முதல் வாரத்தில் ராகுல்காந்தி தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் எதிர்கொள்ளும் பொதுத் தேர்வுச் சிக்கல்கள், நீட் போன்ற நுழைவுத்தேர்வுப் பிரச்சனைகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூக உரிமைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக மக்கள் பிரச்சனைகளைத் தீவிரமாக கையில் எடுத்துப் பேசி வருகிறார். குறிப்பாக, வட இந்திய மாநிலங்களில் மாணவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், அரசுத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் பட்டியிலன மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து களத்தில் இறங்கிப் போராடி வருகிறார்.