📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 22, 2026 09:03 PM

மேற்கு வங்கம்: நதியில் தத்தளித்த யானை குட்டி; உயிரைப் பணயம் வைத்து மீட்டு தாயுடன் சேர்த்த மீனவர்கள்

மேற்கு வங்கம்: நதியில் தத்தளித்த யானை குட்டி; உயிரைப் பணயம் வைத்து மீட்டு தாயுடன் சேர்த்த மீனவர்கள்

மேற்கு வங்க மாநிலம் பைகுந்தபூர் வனச்சரக பகுதிக்கு உட்பட்ட கஜோல்டோபா தடுப்பணைக்கு அருகில் ஐந்து யானைகள் கொண்ட ஒரு கூட்டம் ஆற்றைக் கடக்க முயன்றது. அப்போது அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பிறந்து சில நாள்களே ஆன பச்சிளம் யானை குட்டி ஒன்று தாயின் கட்டுப்பாட்டில் இருந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தண்ணீரில் தத்தளித்தபடி சுமார் 4 முதல் 5 கிலோ மீட்டர் தூரம் வரை அந்தக் குட்டி யானை அடித்து செல்லப்பட்டுள்ளது.