📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 28, 2026 01:03 PM

விராட் கோலி, ஷுப்மன் கில் சதம்: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

விராட் கோலி, ஷுப்மன் கில் சதம்: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

விராட் கோலி, ஷுப்மன் கில்

மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

முதலில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் குவித்தது. ஜஸ்டின் கிரீவ்ஸ் அதிரடியாக விளையாடி 101 ரன்கள் குவித்தார். ஜான் கேம்பெல் 62, கீசி கார்ட்டி 13, ஷாய் ஹோப் 12, அமிர் ஜாங்கு 58, ராஸ்டன் சேஸ் 24, மேத்யூ போர்ட் 7, குடகேஷ் மோதி 4 ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா 32, ஷுப்மன் கில் 110 ரன்கள் விளாசி அவுட்டாயினர். விராட் கோலி 139 ரன்களும் (88 பந்துகள், 10 பவுண்டரி, 9 சிக்ஸர்கள்), ருதுராஜ் கெய்க்வாட் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

41.4 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

15 ஆயிரம் ரன்கள்

இந்தப் போட்டியின்போது இந்திய வீரர் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 15 ஆயிரம் ரன்களைக் கடந்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 15 ஆயிரம் ரன்களைக் குவித்த 2-வது வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்தப் போட்டியின்போது ஒருநாள் போட்டிகளில் தனது 55-வது சதத்தை கோலி விளாசினார். 110 ரன்கள் குவித்த இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு இது 10-வது ஒருநாள் சதமாக அமைந்தது.