📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 13, 2026 05:34 PM

விஜய் இதை செய்துவிட்டால் நான் அரசியலில் இருந்தே விலகுகிறேன்

விஜய் இதை செய்துவிட்டால் நான் அரசியலில் இருந்தே விலகுகிறேன்

107 சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தை பார்த்து முதல்வர் விஜய் பெயரை சரியாக சொல்லிவிட்டால் நான் பொதுவாழ்க்கையில் இருந்து சென்றுவிடுகிறேன் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

அதிமுக - திமுக கூட்டு களவாணிகள்

முதல்-அமைச்சர் விஜய் எப்போதெல்லாம் அதிமுகவை பற்றி விமர்சிக்கிறாரோ அப்போதெல்லாம் ஆர்.பி. உதயகுமார் தவெகவுக்கு எதிராகவும், முதலமைச்சர் விஜய்க்கு எதிராகவும் கருத்துகளை கூறி வருகிறார். சமீபத்தில் கரூரில் பேசிய முதல்0-அமைச்சர் விஜய் அதிமுகவும், திமுகவும் கூட்டு களவாணிகள்தான் என கூறினார்.

குறுக்கு வழியை தேடும் விஜய்

இதற்கு பதிலடி கொடுத்த ஆர்.பி உதயகுமார் ‘சமூக வலைதளங்களில் பல ஆயிரம் கோடிகளை இறைத்து கவர்ச்சியான வசனங்கள் மூலம் ஜென்சி தலைமுறையை மூளைச்சலவை செய்து விஜய் இந்த வெற்றியை பெற்றுள்ளார். கொள்கை இல்லாத இந்த விபரீத அரசியல் போக்கால் தமிழகத்தின் எதிர்காலமே பாழாகிவிடும்.. பெரும்பான்மையை நிரூபிக்க குறுக்கு வழியை தேடும் விஜயிடம் கேள்வியெழுப்பினால் மவுனமே பதிலாக கிடைக்கிறது.

அரசியலில் இருந்து விலகல்

மேலும் ‘தவெகவின் 17 சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தை பார்த்து அவர்களின் பெயரை முதல்-அமைச்சர் விஜய் சொல்லிவிட்டால் நான் பொது வாழ்க்கையிலிருந்தே அதாவது அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன்’ என அவர் சவால் விட்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட முதல்-அமைச்சர் விஜய் கரூர் சம்பவத்தால பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை கொடுத்து தொடர்பாக கருத்து தெரிவித்த ஆர்.பி உதயகுமார் ‘ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்யாதீங்க விஜய். மக்கள் பணத்தில் தவெக கட்சியை வளர்க்க நினைத்தால் தமிழகத்தில் இளைய சமுதாய புரட்சி வெடிக்கும்’ எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.