வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 39வது தமிழ் திருவிழா
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 39வது தமிழ் திருவிழா தெருக்கூத்து: “கடாரம் வென்ற சோழப் பேரரசன் - ராசேந்திர சோழன்”மறக்க முடியாத கலைப் பயணமும், தமிழ்ப் பாரம்பரியத்தின் மாபெரும் கொண்டாட்டமும்தமிழர் பண்பாட்டின் பெருமையைப் பறைசாற்றும் பாரம்பரியக் கலை வடிவமான தெருக்கூத்து, “கடாரம் வென்ற சோழப் பேரரசன் - ராசேந்திர சோழன்” என்ற வரலாற்றுக் கதையை மையமாகக் கொண்டு மேடையேறி, பார்வையாளர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்தது.இந்த நிகழ்வு, மேடையில் நிகழ்ந்த ஒரு கலைநிகழ்ச்சி மட்டுமல்ல; பல மாதங்களாக எண்ணற்ற கலைஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இணைந்து உருவாக்கிய அர்ப்பணிப்பின் அடையாளமாக அமைந்தது. இதில் பங்கேற்ற ஒவ்வொருவரின் உழைப்பும், ஒற்றுமையும், கலையின்மீதான பற்றும் இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தன.கலைஞர்களுக்கான அன்புப் பாராட்டுகள்1. மணிகண்டன் கனகசபை (புத்தா) - மனிதருள் மாணிக்கம்!2. விஷ்ணு பிரகாஷ் கலைச்செல்வன் (சோழன் குலசேகரன்) - கலையை வளர்க்கும் செல்வன்!3. கணேசன் சாமிநாதன் (விக்ரம பாண்டியன்) - யாரு சாமி இவன்? - கலைஞன்!4. விஜய் ஜே. பி. (மஹிந்தன்) - நடிப்பிலும் நடனத்திலும் அரக்கன்!5. அரவிந்த் முத்துதுரை (ராஜராஜ அரையன்) - அழகிய தமிழ் நடிகன்!6. சங்கீதா இராமகிருஷ்ணன் (திரிபுவன மாதேவி) - பொறுமையே இவரின் பெருமை!7. பிரபாகரன் விஜயகுமார் (ஜெயசிம்மன்) - நல்லுள்ளம் கொண்ட நாயகன்!8. மதியரசி தெய்வநாயகம் (சோமா) - கலையரசி!9. ஜேசு ராஜசேகர் தஸ்நேவிஸ் (இராசேந்திர சோழன்) - கலையின் நாயகன்!10. மீனாட்சி ராஜசேகரன் (ரத்னாவளி) - புன்னகை சூடிய ராணி!11. பழனியப்பன் குழந்தைவேலு (காசிபன்) - நாட்டியத் தலைவன்!12. நடராஜன் வைரவன் (ராஜராஜ சோழன்) - நம் தலைவன்!13. குருசாமி வெங்கடேஸ்வரன் (சங்கி ராமன்) - வெள்ளை உள்ளம் கொண்டவர்!14. ஏழுமலை வேலுசாமி (சேரன்) - பசியாற்றிய கர்ணன்!15. ஜான்சிராணி பிரபாகரன் (வானவன் மாதேவி) - ராஜ மாதா!16. வெங்கடேசன் கெசபதி (நரேந்திரன்) - உயர்ந்த மனிதன்!17. கவின் (ஜடாவர்மன்) - பொறுமையின் இளவரசன்!18. ஆனந்த் ராஜ் - நேர்மையின் சிகரம்!19. உதய் மற்றும் ஜெகன் - கலையின் காதலர்கள்!20. நடனக் குழு மற்றும் சண்டைக் குழு - கலை ஆர்வலர்கள்!இந்த மாபெரும் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த கீதா அரவிந்த், சங்கீ, கதீர் கந்தன், பிரியா நாகராஜன், சந்திரா, சண்முகசுந்தரம் (ஷான்) குத்தாலிங்கம், வெற்றிவேல், ராஜேஷ் ராமசாமி, ஜெயமாலினி உள்ளிட்ட அனைத்து தன்னார்வலர்களுக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்.மேலும், தங்களின் பெருந்தன்மையால் இந்த முயற்சிக்கு ஆதரவளித்த சிகாகோ ராஜேந்திரன் அண்ணா மற்றும் அண்ணி அவர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான நன்றிகள்.இந்த நிகழ்வை சிறப்பாகத் திட்டமிட்டு ஒருங்கிணைத்த செந்தில் மற்றும் சசி அவர்களின் அர்ப்பணிப்பு இந்நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.தெருக்கூத்துக்கு உயிரூட்டிய கலைவித்தகர்இந்த நிகழ்வின் ஆன்மாவாக விளங்கிய உயர்திரு. சங்ககிரி ராஜ்குமார், தெருக்கூத்து என்ற பாரம்பரியக் கலையை எளிமையாக மட்டுமல்ல, உயிரோட்டத்துடன் புதிய தலைமுறைக்கு கொண்டு சேர்த்துள்ளார். கதை, வசனம், திரைக்கதை, இசை, நடனம், சண்டைப் பயிற்சி, ஒப்பனை, ஆடை அலங்காரம், கிரீட வடிவமைப்பு என பல துறைகளில் ஒரே மனிதராக (“One Man Army”) செயல்பட்டு, இந்த மாபெரும் படைப்பை உருவாக்கியுள்ளார்.அவரது அர்ப்பணிப்பால், நூற்றாண்டுகளைக் கடந்த தமிழரின் தெருக்கூத்து மரபு, புலம்பெயர் மண்ணிலும் மீண்டும் உயிர்ப்பெற்றது.நிறைவாகஇந்த தெருக்கூத்து எங்களுக்கு ஒரு மேடை நிகழ்ச்சி மட்டுமல்ல; தமிழ் வரலாறு, கலை, பண்பாடு மற்றும் ஒற்றுமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அரிய பாரம்பரியச் சின்னமாக அமைந்துள்ளது. நம் பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் பெருமையுடன் சொல்லக்கூடிய வாழ்நாள் நினைவாகவும், தமிழரின் கலாச்சாரச் செல்வத்தைப் பாதுகாத்த ஒரு மைல்கல்லாகவும் இந்த நிகழ்வு என்றும் நிலைத்திருக்கும்.தமிழ்க் கலை வாழ்க! தெருக்கூத்து வளர்க! தமிழர் பண்பாடு தலைமுறைகள் தாண்டி நிலைத்தோங்குக!