📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 13, 2026 12:32 PM

VCK Thirumavalavan : ’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?

VCK Thirumavalavan : ’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?

VCK Thirumavalavan : ’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?

’இடைத் தேர்தலில் திமுக-வோ அல்லது சீமானோ வெற்றி பெற்றுவிட்டால் தவெக-வில் அதிமுகவினர் இணைவது மாதிரி, திமுக நோக்கியும் நாம் தமிழர் நோக்கியும் பனையூர் பாபு மாதிரி விசிகவினர் சென்றுவிடுவார்கள் என்ற அச்சம்?’

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை ஆறு அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்திருக்கின்றனர். விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்குத் தொகுதியோடு சேர்த்து மொத்த 7 தொகுதிகள் காலியாக இருக்கின்றன. அதில், ஐந்து தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்த தற்காலிக தடையை உயர்நீதிமன்றம் வழங்கியிருந்தாலும் இந்த ஏழுத் தொகுதிகளிலும் இடைத் தேர்தல் விரைவில் நடக்கத்தான் உள்ளது.

பொதுவேட்பாளர் பற்றி முதல் முறையாக பேசிய திருமா

இந்நிலையில், இடைத் தேர்தலில் தவெக-விற்கு எதிராக பொதுவேட்பாளரை நிறுத்த திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்கு முதன்முதலாக பதிலளித்து பேசியிருக்கிறார் விசிக தலைவரும் தவெக கட்சிக்கு ஆதரவு அளித்திருக்கும் திருமாவளவன். இடைத் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்து எந்த கட்சியின் தலைவரும் வாய் திறக்காத நிலையில், பொதுவேட்பாளர் குறித்து முதன்முதலாக வாய் மலர்ந்திருக்கிறார் அவர்.

திமுக குறித்து விமர்சனம் – சீமான் பொது வேட்பாளரா ?

நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள திருமாவளவன், கலைஞர் கருணாநிதிக்கு பேனா சின்னம் வைத்தால் அதை உடைப்பேன் என்று கூறிய சீமானுடன், இன்று திமுகவினர் கொஞ்சி, குலாவி பேசி வருகிறார்கள் என்றும் அவரையே பொதுவேட்பாளராக நிறுத்துவது பற்றியும் அவர்கள் திட்டமிட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார். காலையில் ஒரு பேச்சு, மாலை வந்தால் இன்னொரு பேச்சு என்று திருமாவளவன் மீது விமர்சன கனைகள் விழுந்துகொண்டிருக்கும் நிலையில், சீமானை திமுக பொதுவேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக அவர் பேசியிருப்பது குறித்தும் திமுகவினர் சமூக வலைதளங்களில் விமர்சித்திருக்கிறார்கள்.

திருமாவளவன் தவெக ல சேரும் போது பனையூர் பாபு திமுகல சேருகிறார். திருமாவளவன் SOFA க்காக, ஆர்எஸ்எஸ் குழந்தையுடன் சேர முடிவெடுத்தார். பனையூர் பாபு SOFA வையும்,ஆர்எஸ்எஸ் குழந்தையையும் புறக்கணித்தார். இதுல யாருடைய முடிவு கேவலமானது @thirumaofficial @PanaiyurBabu

ஆதவ் அர்ஜூனாவை திருமா சேர்த்துக்கொண்டது ஏன் ?

அதோடு, விசிக முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபுவை திமுகவில் இணைத்துக்கொண்டது குறித்தும் விமர்சித்திருக்கும் திருமாவளவன், நீண்ட காலம் எங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சி விசிக என்று கூறி, பனையூர் பாபு-வை திமுக இணைக்காமல் இருந்திருக்க வேண்டும் என்று பேசியதற்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பனையூர் பாபுவை திமுக சேர்த்திருக்க கூடாது என்று சொல்லும் திருமா, திமுகவில் இருந்து ஆதவ் விசிகவிற்கு வந்தபோது ஏன் சேர்த்துக்கொண்டார் ? என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றனர்.

பொதுவேட்பாளர் சீமான் என்றால் அச்சமா ?

அதோடு, தவெக-விற்கு எதிராக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வேட்பாளராக நிறுத்தினால் திருமாவளவனுக்கு ஏன் வியர்க்கிறது ? விஜயை விமர்சித்துக்கொண்டு திமுகவுடன் கொஞ்சி, குலாவிக்கொண்டிருந்த திருமா, இப்போது விஜயுடன் கொஞ்சி, குலாவிக்கொள்ளவில்லையா? என்ற விமர்சனங்களும் அவர் மீது நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர். கூட்டணியை விட்டு வெளியே வந்த பின்னர் திமுக யாருடன் கூட்டணி வைத்தால் திருமாவளவனுக்கு என்ன ? அல்லது பொதுவேட்பாளராக சீமானை ஏற்றுக்கொண்டால் கூட அதில் என்ன திருமாவளவனுக்கு பிரச்னை எற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.

ஒருவேளை சீமான் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்துவிட்டால், அதிமுகவினர் தங்கள் பதவிகளை ராஜினமா செய்துவிட்டு தவெக-வில் இணைவது போல, விசிகவினரும் பனையூர் பாபுவை போல, திமுகவை நோக்கியோ அல்லது நாம் தமிழர் கட்சியை நோக்கியோ சென்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில் திருமா பேசுவதாகவும் விமர்சித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி