துலீப் டிராபி இறுதிப்போட்டி: 44 ரன்களில் ஆட்டமிழந்த சூர்யவன்ஷி
துலீப் கோப்பை 2026 இறுதிப்போட்டியில் தென் மண்டல அணிக்கு எதிராக களமிறங்கிய கிழக்கு மண்டல் அணி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 44 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். அரைசதம் அடிக்க இன்னும் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.
கடந்த அரையிறுதியில் மத்திய மண்டலத்துக்கு எதிராக முதல் இன்னிங்சில் 92 ரன்கள் விளாசிய சூர்யவன்ஷி, துலீப் கோப்பை வரலாற்றில் அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். 15 வயது 157 நாட்களில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
இந்நிலையில், தனது முதல் துலீப் கோப்பை இறுதிப்போட்டியிலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யவன்ஷி, 44 ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும், அவரது அதிரடி தொடக்கம் கிழக்கு மண்டல அணிக்கு முக்கியமானதாக அமைந்தது.
கிழக்கு மண்டல் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.