தொடர் தோல்வி எதிராலி.. இந்திய அணி பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றம்? சாட்டையை சுழற்றும் பிசிசிஐ
தொடர் தோல்வி எதிராலி.. இந்திய அணி பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றம்? சாட்டையை சுழற்றும் பிசிசிஐ
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. டி20 உலககோப்பையை வென்ற இந்திய அணி, அதன் பிறகு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை இழந்து சரிவை நோக்கி செல்கிறது. இந்த நிலையில், வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் மற்றும் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் தங்களது எதிர்காலம் குறித்து பிசிசிஐயுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மோர்கல் இன்னும் இறுதி முடிவு எடுக்காத நிலையில், ஆண்டு முழுவதும் அணியுடன் பயணம் செய்வதில் தமக்கு சில தயக்கங்கள் இருப்பதாக டென் டோஸ்கேட் தெரிவித்துள்ளார். அதன் படி, தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிவடைந்த பின்னர், கௌதம் கம்பீர் தலைமையிலான குழுவிலிருந்து இரு பயிற்சியாளர்களும் விலக வாய்ப்புள்ளது.
"இந்தப் பணியில் நீடிப்பது குறித்து டென் டோஸ்கேட்டிற்கு இன்னும் முழுமையான உடன்பாடு இல்லை. ஆண்டு முழுவதும் அணியுடன் பயணம் செய்வதில் உள்ள சிரமங்களை அவர் தெரிவித்துள்ளார். மோர்கல் தனது அடுத்தகட்ட முடிவுகள் குறித்து இன்னும் பரிசீலித்து வருகிறார்" என்று பிசிசிஐ வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் நோக்கில் பிசிசிஐ தற்போது இரு பயிற்சியாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நிலைமையைச் சுமுகமாக முடிக்க வாரியம் முயற்சி செய்து வருகிறது. முன்னதாக, ஐபிஎல் தொடரில் இணைந்து பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில், கௌதம் கம்பீரின் பரிந்துரையின் பேரில் இவர்கள் இருவரும் பிசிசிஐ-யால் நியமிக்கப்பட்டனர்.
டென் டோஸ்கேட் மீண்டும் ஐபிஎல் அணியுடன் இணைந்து பணியாற்ற ஆலோசித்து வருவதாகவும், மோர்கலின் எதிர்காலம் இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து, இந்திய அணி ஜிம்பாப்வேக்குச் சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
ஜூலை மாத இறுதியில் தொடங்கும் இந்தத் தொடருக்கு வி.வி.எஸ். லட்சுமண் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராகச் செயல்படுவார். பிசிசிஐ-யின் சிறப்பு மையத்தின் சேர்ந்த பயிற்சியாளர்கள் குழுவினர் இந்த தொடரில் பங்கேற்பர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர், ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தனது கடமைகளை கம்பீர் மீண்டும் தொடங்குவார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்துடன் முடிவடையும் தனது ஒப்பந்தத்தை மோர்கல் புதுப்பிக்கவில்லை என்றால், இலங்கை சுற்றுப்பயணத்திற்கான வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜியை பிசிசிஐ அனுப்ப வாய்ப்புள்ளது. இதற்கிடையில், இந்தியா, இங்கிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.