📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 13, 2026 07:34 PM

தினம் 50 ரூபாய் சேமித்தால் போதும் கையில் 2 . 5 லட்சம் கிடைக்கும் :போஸ்ட் ஆபிஸ் RD திட்டம்

தினம் 50 ரூபாய் சேமித்தால் போதும் கையில் 2 . 5 லட்சம் கிடைக்கும் :போஸ்ட் ஆபிஸ் RD திட்டம்

எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்ற எண்ணமும் முயற்சியும் இருந்தால் போதும். நாம் கண்டிப்பாக சேமிக்கலாம். அதற்கு சம்பளம் பெரிதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்றைய காலகட்டத்தில் நம்மால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு சேமித்து வைக்கலாம். அதற்கான பல திட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது. வங்கியிலும் சரி போஸ்ட் ஆபிஸ் என்றாலும் சரி இரண்டிலும் குறைந்தளவில் தொகையை வைத்தும் கூட சிறப்பான சேமிப்பு திட்டத்தில் நாம் எதிர்காலத்திற்காக சேமித்து வைக்கலாம்.அந்த வகையில் ஒரு சிறப்பான போஸ்ட் ஆபிஸ் RD திட்டம் ஒன்று உள்ளது. தினம் நாம் குறைந்த பட்ச தொகையாக ஐம்பது ரூபாய் சேமித்தால் போதும். பத்து வருடங்களில் நாம் லட்சாதிபதி ஆகலாம். தினம் ஐம்பது ரூபாய் என்பது ஒரு பெரிய தொகையாக நமக்கு தெரியாது.எனவே தினம் பத்து வருடங்கள் ஐம்பது ரூபாயை போஸ்ட் ஆபிசில் சேமித்தால் பத்து வருடங்களில் நாம் வட்டியுடன் சேர்த்து ஒரு நல்ல தொகையை இந்த திட்டத்தின் மூலம் பெறலாம். அதற்கான வழிகள் என்ன ? எப்படி சேமிப்பது ? யாரெல்லாம் இந்த திட்டத்தில் சேமிக்கலாம் ? என்பதை பார்ப்போம்இந்த போஸ்ட் ஆபிஸ் RD திட்டம் என்பது அரசு வழங்கும் திட்டம். எனவே நாம் சேமிக்கும் பணம் முழு பாதுகாப்புடன் இருக்கும். இந்த திட்டத்தில் இந்தியாவில் உள்ள யார் வேண்டுமானாலும் இணையலாம். குழந்தைகள் பேரிலும் இந்த திட்டத்தை துவங்கலாம்அதாவது இந்த போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தை துவங்கி தினம் ஐம்பது ருபாய் சேமித்து வர வேண்டும். தினம் ஐம்பது ரூபாய் சேமித்தால் பத்து நாட்களுக்கு 500 ரூபாய் அதுவே ஒரு மாதத்திற்கு 1500 ரூபாய்இப்படியே தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு தினம் 50 ரூபாய் என மாதம் 1500 ரூபாய் சேமித்து வந்தால் மொத்தம் 1 ,80 ,000 ரூபாயை நாம் சேமிக்கலாம்1 ,80 ,000 ரூபாய் என்பது நாம் சேமித்த பணம். இந்த பணத்திற்கு அரசு 6 . 7 % வட்டி தருவார்கள். எனவே நாம் கட்டிய 1 ,80 ,000 ரூபாய் பணத்திற்கு அரசு தரும் 6 . 7 % வட்டியை கணக்கு போட்டு பார்த்தால் 76 ,000 ரூபாய் கிடைக்கும்இதன் மூலம் நாம் கட்டிய 1 ,80 ,000 மற்றும் வட்டி பணம் 76 ,000 யை சேர்த்து மொத்தம் 2 . 56 லட்சம் நமக்கு கிடைக்கும். நாம் தினம் 50 ரூபாய் என்ற குறைந்த அளவிலான சேமிப்பில் பத்து வருடங்களில் 2 . 56 லட்சம் ரூபாயை பெறலாம்.அரசு இதுபோன்ற திட்டங்களை ஏழை எளிய மக்களுக்காக தான் கொண்டு வந்துள்ளது. ஏழை எளிய மக்களாகும் தினம் ஐம்பது ரூபாயை சேமிக்க முடியும். அப்படி தொடர்ந்து பத்து வருடங்கள் அவர்கள் சேமித்து வந்தால் அவர்களுக்கு அரசு வட்டியுடன் 2 . 56 லட்சம் கிடைக்கும். இந்த தொகை அவர்களுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் நீங்கள் பாதியிலேயே ஏதேனும் அவசர தேவைக்காக இந்த பணத்தை எடுக்க நினைத்தால் நீங்கள் சேமித்த தொகையில் இருந்து 50 % பணத்தை கடனாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது