📅 Saturday, 11 July 2026 IST | ஆனி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 11, 2026 09:30 PM

தேசிய ஒற்றுமைக்கு மொழி நல்லிணக்கம் அவசியம்: ‘காசி தமிழ் சங்கமம்’ விழாவில் ஆளுநர்

தேசிய ஒற்றுமைக்கு மொழி நல்லிணக்கம் அவசியம்: ‘காசி தமிழ் சங்கமம்’ விழாவில் ஆளுநர்

சென்னை: தேசிய ஒரு​மைப்​பாடு மேம்பட மொழி நல்​லிணக்​கம் அவசி​யம் என்று காசி தமிழ்ச் சங்​கமம் விழா​வில் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் வலி​யுறுத்​தி​னார்.

தமிழகத்​துக்​கும் வட இந்​தி​யா​வில் உள்ள காசிக்​கும் இடையே​யான கலாச்​சார, வரலாற்று உறவு​களை மேம்​படுத்​தும் வகை​யில் மத்​திய அரசு காசி தமிழ்ச் சங்​கமம் என்ற சிறப்​புத் திட்​டத்தை செயல்​படுத்தி வரு​கிறது.

இந்​நிகழ்ச்​சி​யின் 4-வது பதிப்பு (காசி தமிழ்ச் சங்​கமம் 4.0) கடந்த ஆண்டு டிசம்​பர் 2 முதல் 15 வரை நடை​பெற்​றது. இதை சென்னை ஐஐடி​யும் பனாரஸ் இந்து பல்​கலைக்​கழக​மும் ஒருங்​கிணைப்பு செய்​தன.

இந்​நிலை​யில், காசி தமிழ்ச் சங்​கமம் 4.0 நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றவர்​களுக்கு பாராட்டு விழா கிண்டி ஆளுநர் மாளி​கை​யில் உள்ள பார​தி​யார் மண்​டபத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இவ்​விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் தலைமை தாங்​கிப் பேசி​ய​தாவது: காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்​சி​யானது தேசிய ஒரு​மைப்​பாட்​டை​யும், கலாச்​சார ஒற்​றுமை​யை​யும் பலப்​படுத்​தும் நோக்​கில் பிரதமர் மோடி​யின் மனதில் உதித்த ஒரு தொலைநோக்கு திட்​ட​மாகும்.

இத்​திட்​டத்தை தமிழகத்​தில் சிறந்த முறை​யில் நடை​முறைப்​படுத்​திய முன்​னாள் ஆளுநர் ஆர்​.என்​.ர​வியை பாராட்​டு​கிறேன். இந்த திட்​டம் வாயி​லாக தமிழகத்​திலிருந்து 7 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் காசி சென்று வந்​துள்​ளனர்.

இந்​தி​யா​வின் ஒரு​மைப்​பாடு வலுப்பட வேண்​டு​மா​னால் ஒரு பகு​தி​யைச் சேர்ந்த மக்​கள் மற்ற பகு​தி​யினர் பேசும் மொழியை கற்க வேண்​டும். உதா​ரணத்​துக்கு வட இந்​திய மக்​கள் குறைந்​த​பட்​சம் தென்​னிந்​திய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை கற்​றுக்​கொள்ள வேண்​டும்.

அதே​போல் தமிழகம் உள்​ளிட்ட தென்​னிந்​தி​யா​வைச் சேர்ந்​தவர்​கள் ஏதேனும் ஒரு வட இந்​திய மொழியை படிக்க வேண்​டும். தேசிய ஒரு​மைப்​பாட்​டின் மேம்​பாட்​டுக்கு மொழி நல்​லிணக்​கம் அவசி​ய​மானது.

ஒரு மொழியை கற்​ப​தால் என்ன சிரமம் என்று எனக்கு தெரிய​வில்​லை. புதிய மொழியை கற்​பது கலாச்​சார பிணைப்​பு​களை மேம்​படுத்​து​வ​தில் ஒரு பால​மாக அமை​யும்.

இந்​தியா பன்​முக கலாச்​சா​ரங்​களின் ஒரு தொகுப்பு அல்ல. மாறாக பலதரப்​பட்ட பாரம்​பரி​யங்​களை வெளிப்​படுத்​தும் ஓர் ஒருங்​கிணைந்த நாகரி​கம் ஆகும். எப்​போதெல்​லாம் இந்​தியா ஒற்​றுமை​யாக இருந்​திருக்​கிறதோ அப்​போதெல்​லாம் அது மிகப்​பெரிய சாதனை​களைப் படைத்​துள்​ளது.

பிரி​வினை ஏற்​பட்​டால் நாடு துண்​டாகி​விடு​கிறது என்​பதை வரலாறு நமக்கு தெளி​வாகக் காட்​டு​கிறது. இவ்​வாறு ஆளுநர் பேசி​னார்.

இவ்​விழா​வில் ஆளுநரின் செயலர் சஜன்​சிங் ஆர்​.ச​வான், ஐஐடி இயக்​குநர் வி.​காமகோடி, மத்​திய தமிழ் செம்​மொழி ஆராய்ச்சி நிறு​வனத்​தின் துணைத் தலை​வர் டாக்​டர் சுதா சேஷய்​யன்​ உள்​ளிட்டோர் பங்கேற்றனர்.