📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 17, 2026 12:01 PM

ரஜினி, கமல் இணையும் படம்.. ஓவர் ஹைப் ஏற்றும் சமுத்திரகனி.. பெரிய நம்பிக்கை வெச்சுருக்காரு!

ரஜினி, கமல் இணையும் படம்.. ஓவர் ஹைப் ஏற்றும் சமுத்திரகனி.. பெரிய நம்பிக்கை வெச்சுருக்காரு!

சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் படத்துக்கு இப்போதைக்கு KHXRK என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு க்ளிம்ப்ஸும் வெளியானது. நெல்சன் இயக்கிய ஜெயிலர் 2 படம் மெகா ஹிட் என்பதால்; இந்தப் படத்தின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இப்போதே எழ தொடங்கிவிட்டது.

இந்திய திரைத்துறையே எதிர்பார்த்திருக்கும் படமாக மாறியிருக்கிறது KHXRK திரைப்படம். இரண்டு ஜாம்பவான்களான ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு பின்பு இணைந்து நடிக்கிறார்கள். அநேகமாக இதுதான் அவர்கள் இரண்டு பேருக்கும் கடைசி படமாகக்கூட இருக்கலாம் என்றும் பலரால் கருதப்படுகிறது. இதனால்தான் இப்படம் பெரிய ஹைப்பை பெற்றிருக்கிறது. கண்டிப்பாக 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் படமாக இருக்கும் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

நெல்சன் இயக்குநர்: ரஜினியும், கமலும் சேரப்போகிறார்கள் என்ற தகவல் கசிந்ததுமே; யார் இயக்குநர் என்பதில்தான் பலரது கவனமும் இருந்தது. முதலில் லோகேஷ் கனகராஜிடம்தான் கதை கேட்டிருக்கிறார்கள். அவர் சொன்ன கதையில் வன்முறைகள் ஓவராக இருந்ததாக தெரிகிறது. இவர்களோ, லைட்டான கதையோடு ஒரு படத்தை செய்ய வேண்டும் என்ற முடிவில் இருந்ததால் லோகேஷுக்கு பதிலாக நெல்சன் திலீப்குமாரை டிக் அடித்தார்கள்.

நெல்சனுக்கு எப்படி வாய்ப்பு?: அடிப்படையில் நெல்சனுக்குள் அதீதமான ஹியூமர் இருக்கிறது. அவரது படங்களில் அது நன்றாக ஒர்க் அவுட்டும் ஆகியிருக்கின்றன. பீஸ்ட் மட்டும்தான் சொதப்பிவிட்டது. அதேசமயம் அவர் தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த இயக்குநர்தான். அந்த நம்பிக்கையிலும், ஏற்கனவே இரண்டு பேரின் குட் புக்கிலும் நெல்சன் இருப்பதாலும் இந்த வாய்ப்பு அவருக்கு சென்றிருக்கிறது. அவரும் இதனை சரியாக பயன்படுத்திட வேண்டும் என்று முனைப்போடு உழைத்துவருகிறார்.

ஜெயிலர் 2வால் எதிர்பார்ப்பு: நேற்று முன்தினம்தான் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி மெகா ஹிட்டடித்தது. படத்தில் இடம்பெற்ற ஆக்‌ஷன் காட்சிகள் வரவேற்பை பெற்றன. இருப்பினும் முதல் பாதியில் வந்த காமெடி காட்சிகள் பக்காவாக ஒர்க் அவுட் ஆகியிருந்தன. நமோ நாராயணாவை வைத்து காமெடி சடுகுடுவையே நடத்திவிட்டார் நெல்சன். ரஜினியும் அதற்கு முழு ஒத்துழைப்பை கொடுத்திருந்தார். ஆக்‌ஷன் படத்திலேயே இப்படி காமெடி வைத்தவர்; ரஜினி, கமல் இணையும் லைட் ஹார்ட் படத்தில் என்ன மாதிரியெல்லாம் காமெடியை யோசித்திருப்பாரோ என இப்போதே பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

சமுத்திரகனி பேட்டி: கண்டிப்பாக வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு படமாக அதை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஜெயிலர் 2வால் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் சமுத்திரகனி இப்படம் குறித்து பேசுகையில், "ரஜினியும், கமலும் இணையும் படம் விலை மதிக்க முடியாத படைப்பு. எங்களுக்கு எல்லாம் ஒரே குருநாதர்தான் பாலசந்தர். 47 வருடங்களுக்கு பிறகு இரண்டு துருவங்கள் இணைகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய விஷயம். அது வேறு எந்த திரைத்துறியில் நடக்கும்? இங்கே மட்டும்தானே நடந்திருக்கிறது. அது ஆயிரம் கோடி எல்லாம் இல்லை. பல்லாயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும்" என்றார்.