📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 17, 2026 12:00 PM

#BREAKING: அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்: பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்!

#BREAKING: அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்: பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்!

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக இருந்த தேவா இன்று காலை காலமானார், அவருக்கு வயது 75 . 1900 களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் இளையராஜா உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. அந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் ஏராளமான இசையமைப்பாளர்கள் அறிமுகமானாலும் எவராலும் நிலைத்து நிற்க முடியவில்லை. அத்தகைய சூழலில் 1986 ஆம் ஆண்டு 'மாட்டுக்கரை மன்னாரு' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

தேவா திரைத்துறையில் அறிமுகமானபோதும் உடனடியாக அவரால் வெற்றினை ஈட்ட இயலவில்லை. வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன் பின்னர் அவரை இசையமைத்த ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அண்ணாமலை திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக தேவா மாறினார். அதிலிருந்து ரஜினி, கமல் ,விஜய் ,அஜித், பிரபுதேவா, பிரசாந்த் , சூர்யா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறினார்.

இசைத்துறையில் 40 ஆண்டுகாலம் தாண்டி அவரது புகழ் பரவியுள்ளது. இந்நிலையில் இன்று அவர் தனது வீட்டில் காலமானார்.