📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 17, 2026 12:01 PM

Musician Deva: தேனிசை தென்றல் தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில்

Musician Deva: தேனிசை தென்றல் தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில்

Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்

Music Director Deva Passed Away: தேனிசை தென்றல் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட இசையமைப்பாளர் தேவா தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர். அவரின் மரணம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனிசை தென்றல் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் காலமானார். இந்த சம்பவம் தமிழ் சினிமா உலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

75 வயதான அவர் இன்று காலை மாரடைப்பு காரணமான கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேவா அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. தேவாவின் மறைவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேவாவின் இசைப்பயணம்

தேவனேசன் சொக்கலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட தேவா தமிழ் , கன்னடம் , தெலுங்கு மற்றும் மலையாளம் என சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் வளர்ந்த அவர் இசையில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக சுயமாக ஹார்மோனியம் வாசிக்க கற்றுக் கொண்டார். பின்னர் மேடை இசைக் கலைஞர்களுடன் இணைந்து தன் கலையை வளர்த்துக் கொண்டார். இசையமைப்பாளர் சந்திரபோஸுடன் இணைந்து 1973ம் ஆண்டு இசைக்குழு ஒன்றை நடத்தி வந்தார் தேவா.

தூர்தர்ஷன் பொதிகை சேனலில் பணிபுரிந்த அவர்,வயலும் வாழ்வும் என்ற நிகழ்ச்சிக்கு பாடல்களை இசையமைத்தார். 1980களின் தொடக்கத்தில் பக்தி பாடல்களுக்கு இசையமைக்க தொடங்கினார். குறிப்பாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பாடல்கள் தேவா இசையில் அந்த காலக்கட்டத்தில் உருவானது. அப்படியான சமயத்தில் தான் திருவேற்காடு கோவிலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கலந்துக் கொண்டு தேவாவின் பக்தி பாடல்களைப் பாராட்டி அவருக்கு தேனிசை தென்றல் பட்டம் வழங்கினார்.

மனசுக்கேத்த மகராசா என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தேவா ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரசாந்த், சத்யராஜ், விஜய், அஜித் உள்ளிட்ட அன்றைய முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்தார்.

கானா பாடகர்களுக்கு குரு

தமிழ் சினிமாவில் கானா பாடல்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு தேவா தான் அதன் குரு என்னும் சொல்லும் அளவுக்கு பட்டித்தொட்டியெங்கும் அதனைக் கொண்டு சேர்த்தார். இசையமைப்பாளராக மட்டுமின்றி பாடகர், நடிகர் என ரசிகர்களை தன்னால் முடிந்த அளவு மகிழ்வித்தார். தன்னுடைய இசை மட்டுமல்லாமல் பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் எந்தவித ஈகோவுமின்றி வந்து பாடி அவர்களின் பணிகளை புகழ்வதில் தேவாவுக்கு நிகர் அவர் தான். இப்படியான தேவா 2000த்தின் பிற்பகுதியில் படங்களுக்கு இசையமைப்பதை குறைத்துக் கொண்டார். அதேகாலக்கட்டத்தில் அவரது மகனான ஸ்ரீகாந்த் தேவாவும் சினிமாவுக்குள் நுழைந்து ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் தேவாவின் சகோதரர் சபேஷ்- முரளியும் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி