📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 17, 2026 01:04 PM

சாலை விபத்து: மோட்டார் சைக்கிளோட்டிக்கு அபராதம்

சாலை விபத்து: மோட்டார் சைக்கிளோட்டிக்கு அபராதம்

சாலை விபத்து ஒன்றில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் சிறுபேருந்துக்குக்கீழ் (minibus) பல மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

சம்பந்தப்பட்ட சிறுபேருந்து ஓட்டுநருக்கு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

முகம்மது ஸுல்ஹாட்ஸ்லி சுலாய்மான், 32, பிறருக்கு மோசமான காயங்களை ஏற்படுத்தும் வகையில் போதுமான அக்கறையுடன் வாகனம் ஓட்டாததாகத் தன்மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். ஏழு பிள்ளைகளுக்குத் தந்தையான அவருக்கு வாகனம் ஓட்ட ஐந்தாண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது.

அபராதத்தைச் செலுத்துவதற்குப் பதிலாக அவர் ஐந்து நாள்கள் சிறைத்தண்டனையை நிறைவேற்ற ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பவம் கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி 10.43 மணியளவில் நிகழ்ந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பெயர் தெரிவிக்கப்படாத மோட்டார் சைக்கிளோட்டி உட்லண்ட்ஸ் அவென்யூ 6ல் உட்லண்ட்ஸ் தொழில்நுட்பப் பூங்கா இ4ஐ நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.

காயமுற்ற மோட்டார் சைக்கிளோட்டி அவசர மருத்துவ உதவி வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். கால் எலும்பு வெளியே தெரியும் அளவுக்கு ஆழமான வெட்டுக் காயங்களுக்கு அவர் ஆளானார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் மார்ச் 11ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் 58 நாள்கள் மருத்துவமனைச் சிகிச்சை விடுப்பில் (hospitalisation leave) இருந்தார்.