📅 Saturday, 11 July 2026 IST | ஆனி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 11, 2026 11:34 AM

ஒழுங்கா ஆடாத இந்த பேட்ஸ்மேனை நீக்கி விட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுங்க.. பார்த்திவ் கோரிக்கை

ஒழுங்கா ஆடாத இந்த பேட்ஸ்மேனை நீக்கி விட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுங்க.. பார்த்திவ் கோரிக்கை

ஒழுங்கா ஆடாத இந்த பேட்ஸ்மேனை நீக்கி விட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுங்க.. பார்த்திவ் கோரிக்கை

சவுதாம்ப்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11-இல் சில அதிரடி மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும், குறிப்பாக துணை கேப்டன் திலக் வர்மாவை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் கூறி இருக்கிறார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று சவுதாம்ப்டனில் நடைபெற உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி ஏற்கனவே 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்துவிட்டது.

இந்த நிலையில், கடைசிப் போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கும் இந்திய அணியில் சில முக்கியமான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று பார்த்திவ் படேல் ஆலோசனை வழங்கியுள்ளார். திலக் வர்மா அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் ஒரு அரைசதம் அடித்து இருந்தாலும் மற்ற போட்டிகளில் பந்துகளை வீணடித்து வருகிறார்.

இது குறித்து பார்த்திவ் படேல் பேசுகையில், "இங்கிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் இந்திய அணியில் நான் இரண்டு முக்கிய மாற்றங்களைச் செய்ய விரும்புகிறேன். முதலாவதாக துணை கேப்டன் திலக் வர்மாவிற்குப் பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும். சஞ்சு சாம்சன் அயர்லாந்து தொடரிலும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் சரியாக விளையாடாததால் நீக்கப்பட்டார். ஆனால், ஜிம்பாப்வே தொடருக்கு முன்னதாக அவருக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். திலக் வர்மா இந்தத் தொடர் முழுவதும் சொதப்பி வருகிறார், கடந்த 4வது போட்டியில் கூட அவர் 8 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "இரண்டாவது மாற்றமாக, ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக இளம் வீரர் சூர்யான்ஷ் ஷெட்கேவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இதன் மூலம் அணியில் 4 முக்கிய பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். அதே நேரத்தில் சிவம் துபே மற்றும் சூர்யான்ஷ் ஷெட்கே ஆகியோர் தலா 2 ஓவர்கள் பந்துவீச முடியும்" என்று கூறினார்.

துணை கேப்டன் திலக் வர்மாவை நீக்குவது குறித்துப் பேசிய பார்த்திவ் படேல், இது தற்காலிகமான முடிவு மட்டுமே என்றும், உலகக் கோப்பையில் துணை கேப்டனாக இருந்த அக்சர் படேல் கூட தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெளியில் அமர வைக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். திலக் வர்மா இன்னும் எதிர்காலத் திட்டங்களில் இருப்பார் என்றும், தற்போதைய சூழலில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிப்பதே சிறந்தது என்றும் அவர் கூறினார்.