📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 13, 2026 11:33 PM

ஓய்வூதியம் தாமதமாக வாய்ப்பு: தமிழக அரசு விளக்கம்

ஓய்வூதியம் தாமதமாக வாய்ப்பு: தமிழக அரசு விளக்கம்

சென்னை: சமூகப் பாது​காப்பு திட்​டங்​களின்​ கீழ் ஓய்​வூ​தி​யம் பெற்று வருபவர்​களுக்கு நடப்பு மாதத்​துக்​கான தொகை வரவு வைக்​கப்​படு​வ​தில் தாமதம் ஏற்பட வாய்ப்​புள்​ள​தாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மத்​திய அரசின் பங்​களிப்​புடன் செயல்​படுத்​தப்​படும் தேசிய முதி​யோர் ஓய்​வூ​தி​யத்​திட்​டம், தேசிய விதவையர் ஓய்​வூ​தி​யத் திட்​டம் மற்​றும் தேசிய மாற்​றுத் ​திற​னாளி​கள் ஓய்​வூ​தி​யத் திட்​டம் ஆகிய​வற்​றின் கீழ் சுமார் 19 லட்​சத்து 20,858 பேர் ஓய்​வூ​தி​யம் பெற்று வருகின்றனர்.

இந்த திட்​டங்​களின் ​கீழ் ஆகஸ்ட் மாதத்​துக்​கான ஓய்​வூ​தி​யத் தொகையை வழங்​கு​வதற்​கான நடவடிக்​கை​கள் மத்​திய அரசால் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இந்த திட்​டங்​களின் பயனாளிகளுக்​கான ஓய்​வூ​தி​யப் பட்​டியல் தயார் செய்​யப்​பட்​டு, மத்​திய அரசின் பங்​களிப்​புத் தொகைக்​கான ஒப்​புதலுக்​காக அனுப்​பப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், செப்​.11 முதல் 14-ம் தேதி வரை மத்​திய அரசு அலுவல​கங்​களுக்கு தொடர் விடு​முறை என்​ப​தால், ஓய்​வூ​தி​யப் பட்டியலுக்கு ஒப்​புதல் பெறு​வ​தில் தாமதம் ஏற்பட வாய்ப்​புள்​ளது. எனவே, தங்​கள் ஓய்​வூ​தி​யத் தொகை வரவு வைக்​கப்​படு​வ​தில் ஏற்படும் தாமதம் குறித்து அச்​சம் கொள்​ளத் தேவை​யில்​லை. இவ்வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.