📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 13, 2026 11:33 PM

தி.மு.க.,வின் முடிவுரையை மக்கள் விரைவில் எழுதுவார்கள்: அமைச்சர் நிர்மல் குமார்

தி.மு.க.,வின் முடிவுரையை மக்கள் விரைவில் எழுதுவார்கள்: அமைச்சர் நிர்மல் குமார்

சென்னை: தமிழக அரசியல் களத்தில் இருந்து தி.மு.க.,வின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்

சட்டசபையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மிசாவில் கைதானது குறித்து முதல்வர் விஜய் பேசியதற்கும், அவருடைய சைகைக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் , முதல்வர் விஜயை ஒருமையில் பேசியதோடு, அமைச்சர் நிர்மல் குமார் குறித்து தரக்குறைவான வகையில், தி.மு.க, எம்.பி., ராஜா விமர்சனம் செய்தார்.

இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் நிர்மல் குமார், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு கேள்விகளை அடுக்கி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஆர்ப்பாட்டம் என்ற பெயரில், தி.மு.க.,வினர் நடத்திய ஆபாச நாடகம் பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

தி.மு.க.,வை நோக்கி ஊழல், துரோகம், பொய் குறித்து கேள்விகள் கேட்டால், வன்முறை அல்லது ஆபாசமாக பேசுகின்றனர். மேடை போட்டு, என்னையும், முதல்வரையும் ஆபாசமாக பேச வைப்பது தான் தி.மு.க.,வின் கடைசி ஆயுதம் போல.

தி.மு.க.,வினரின் தரமற்ற பேச்சுகளை, அவர்கள் வீட்டில் பெண்கள், குழந்தைகளிடம் காட்ட முடியுமா என்பதை ஸ்டாலின் கூற வேண்டும். அரசியலில் ஒவ்வொரு அசைவும், மக்களால் தணிக்கை செய்யப்படுகிறது என்பதை ஸ்டாலின் உணர வேண்டும்.

தி.மு.க,வின் அட்டூழியங்களை நேர்மையாக நாங்கள் எதிர் கொள்வோம். தமிழக அரசியல் களத்தில் இருந்து தி.மு.க.,வின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என்பது நிச்சயம். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.