திமுக எம்பி ஆ.ராசா குறித்து தவெக மாசெ அநாகரிக பேச்சு: இணையத்தில் வீடியோ வைரல்
திமுக எம்பி ஆ.ராசா குறித்து தவெக மாசெ அநாகரிக பேச்சு: இணையத்தில் வீடியோ வைரல்
சென்னை: சட்டமன்றத்தில் ஆணவமாக பேசிய முதல்வர் விஜய்யை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆ.ராசா, முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் தேனி தெற்கு மாவட்ட தவெக செயலாளர் லெப்ட் பாண்டி, திமுக எம்பி ஆ.ராசா குறித்து அநாகரிகமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், தவெக தேனி தெற்கு மாவட்ட செயலாளர் பேசுறேன். உங்க டீம் எல்லாம் 50 வயசு 60 வயசு தாண்டினவங்க, இங்க எல்லாம் 20 வயசு, 25 வயசு இளந்தாரிங்க. சூதானமா பேசி பழகு. எங்க அண்ணன் யாருக்கு பிறந்தாருன்னு தெரியாதா?. மிசான்னா என்னவாம், அதுல இருந்த விஷயத்தை அண்ணன் சட்டசபையில் படிச்சாரு... அதுக்கு ஏன் குதிக்கிறீங்க. நான் தேனிக்காரன். நாங்க பேசினா டங்குவார் அந்துடும். கட்சி ஆரம்பிச்சு 2 வருஷத்துல ஆட்சிய பிடிச்சுட்டோம்ல, அந்த வயித்தெரிச்ச. நாங்க எல்லாம் சுயம்பு மாதிரி’’ என எழுத்தில் சேர்க்க முடியாத அளவிற்கு ஆபாசமாகவும், அநாகரிமாகவும் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.