📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 21, 2026 10:03 AM

மதுராந்தகம் தொகுதியில் அதிமுக, திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

மதுராந்தகம் தொகுதியில் அதிமுக, திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

மதுராந்தகம்: மது​ராந்​தகம் இடைத்​தேர்​தலில் போட்​டி​யிடும் அதி​முக, திமுக, தவெக, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி வேட்​பாளர்​கள் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், மது​ராந்​தகம் சட்​டப் பேரவை இடைத்​தேர்​தலில் திமுக வேட்​பாளர் பரந்​தாமன், பிலாப்​பூர் பகு​தி​யில் சுவாமி தரிசனம் செய்​து​விட்டு பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார். அப்​போது அவர் பொது​மக்​களிடையே பணப்​பெட்​டியைக் காண்​பித்​து, இதற்​காகத்​தான் இடைத்​தேர்​தல் வந்​தது எனக் கூறி வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டார். முன்​னாள் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், மாவட்​டச் செய​லா​ளர் சுந்​தர் ஆகியோர் உடனிருந்​தனர்.

இதே​போல் அதி​முக வேட்​பாளர் கணிதா சம்​பத், மது​ராந்​தகம் தொகு​திக்கு உட்​பட்ட அச்​சிறுப்​பாக்​கம் வடக்கு ஒன்​றி​யத்​துக்கு உப்​பட்ட விநாயகர்​நல்​லூர், வேடந்​தாங்​கல், வளை​யபுத்​தூர், வெள்​ளபுத்​தூர், சித்​தத்​தூர், கரிக்கி​லி, பாப்​பநல்​லூர், எல்​.எண்​டத்​தூர், தீட்​டாளம் உள்​ளிட்ட 40-க்​கும் மேற்​பட்ட கிராமங்​களுக்கு திறந்த வாக​னத்​தில் சென்று இரட்டை இலை சின்​னத்​துக்கு வாக்கு சேகரித்​தார்.

அப்​போது, 2011 முதல் 2016 வரை மது​ராந்​தகம் எம்எல்ஏவாக இருந்​த​போது மது​ராந்​தகம் தாலுகா அலு​வலகம், மது​ராந்​தகம் ஒருங்​கிணைந்த நீதி​மன்​றம், மது​ராந்​தகம் ஒன்​றி​யத்​தில் கத்​திரிச்​சேரி மேம்​பாலம், அச்​சிறுப்​பாக்​கம் ஒன்​றி​யத்​தில் தண்​டர்​பேட்டை மேம்​பாலம், எல்​.எண்​டத்​தூர் சுகா​தார நிலைய கட்​டிடம், ஜமீன் எண்​டத்​தூர் சுகா​தார நிலைய கட்​டிடத்​தில் 30 படுக்கை வசதி கொண்​டது மாற்றி அமைத்​துள்​ளேன். ரூ.10 கோடிக்கு மேல் நலத்​திட்ட பணி​களைச் செய்​துள்​ளேன். இது மட்​டுமில்​லாமல் அரசின் அனைத்து திட்​டங்​களை​யும் செயல்​படுத்தி உள்​ள​தாகத் தெரி​வித்​தார்.

இதேபோல், ஆளுங்​கட்​சி​யான தவெக வேட்​பாளர் மரகதம் குமர​வேல் ஒரத்​தி, பெரும்​பேர் கண்​டிகை, கடமலை புத்​தூர் ஆகிய கிராமப்​பகு​தி​களில் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் வேட்​பாளர் சுகந்​தி, மது​ராந்​தகம் நகராட்​சிக்கு உட்​பட்ட 24 வார்​டு​களி​லும் அரி​வாள் சுத்தி சின்​னத்​துக்கு வாக்​கு சேகரிப்​பில்​ ஈடுபட்​டார்​.